வியாழன், 4 ஆகஸ்ட், 2022

 

கறுப்பு ஒளி..... நெய்வேலி பாரதிக்குமார்

 



நிலவு மறைந்திருந்த இரவில் ..

வீடுகள் நிறைந்த காடு

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

காட்டில் முளைத்திருந்த

கான்கிரீட் மரங்கள்

விளக்குகளை அணைத்து விட்டு

அசையாமல் நின்று கொண்டிருந்தன..

 

குளிர்சாதனப் பெட்டிகள் மட்டும்

உறங்கா மிருகம் போல  

உறுமிக் கொண்டிருந்தன..

கான்கிரீட் மரங்களின்

இடிபாடுகளுக்கு இடையில்

மின்தூக்கிகள் நசுங்கிக் கொண்டிருந்தன..

 

வனங்களாக மாறிக் கொண்டிருந்த

நகரங்களின்// ஒவ்வொரு  அடுக்ககத்திலும்

உறக்கத்தை தொலைத்த

இரவுக் காவலர்களின்

கறுத்த விழிகளில் இருந்து  

அலைந்து கொண்டிருந்தது

தனிமையின் ஒளி...

(தலைமைச் செயலக குறிஞ்சி மன்றம் 19-06-2-22 அன்று நடத்திய கவிதைப் போட்டியில் மாலை 05.00 மணிக்கு முடிவடையும் என்பது 04-20 மணிக்குத் தெரிந்து பின்னர் எழுதி 04. 50 மணிக்கு அனுப்பி தேர்வுப்  பெற்ற கவிதை..)

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...