புதன், 6 ஆகஸ்ட், 2008

தொலைபேசி சிணுங்கியது

எத்தனை முறை இம்சித்திருக்கிறது சாப்பிடுகையில் நடுவே...
ஒற்றையாய் குளிக்கும்பொழுது வெளியே....
நல்ல உறக்கத்தை தழுவும் சமயத்தில் தொணதொணவென்று
காது கேளாமல் அடம்பிடிக்கும் ஒரு பிச்சைக்காரனைப்போல்
சப்திக்கும் இந்த தொலைபேசி....
இப்பொழுதெல்லாம் உன் அழைப்பை சுமந்துவருகையில்புரிந்து கொள்ளமுடிகிறது எத்தனை
அழகானச் சொற்றொடர் ‘தொலைபேசி சிணுங்கியது' என்பது.....

                              சலஞ்சலம்                                                 நெய்வேலி பாரதிக்குமார் க யல் என்று பெரிதாக எழுத...