வியாழன், 4 ஆகஸ்ட், 2022

 


எல்லைக்கோடுகள் புலப்படாத நிலவெளி....

ஓவியாவின் மைதானத்தில்
வினாக்களால் உருட்டப்பட்டுக் கொண்டிருந்தேன் ..
எறும்புகள் உறங்கும் போது
படுக்கையில் பாத்ரூம் போகுமா என்ற
அவளின் கேள்வியோடு
புரண்டு கொண்டிருக்கையில்...
அவள் மைதானத்திலிருந்து வெளியேறி
முகமெங்கும் வண்ணங்கள் அப்பி
வானத்தின் நீல நிறத்தை கழற்றி
ஆரஞ்சு வண்ணத்தைப் பூசிக்கொண்டு இருந்தாள்...

நீரெடுத்துத் தேடுகையில்
சிறுவிவசாயியாகி
ரோஜாப்பூவின் முள்ளைக் கிள்ளிவிட்டு
பூவை மட்டும் நட்டுக்கொண்டு இருந்தாள்...

பிரியவே விரும்பாத
பிரியத்துக்குரிய
சூப்பர்மேன் பொம்மையை
இரவு முழுவதும்
தனித்திருக்கும் கடலுக்காக
கடற்கரையில்
துணைக்கு வைத்திருக்கிறேன் என்று
தொலைத்தலுக்கு காரணம் சொல்வாள்...

கனவுகள் யாவும் கொதித்து
ஆவியாகிவிடும் நிகழ் உலகில்.....

அவளின் ஆளுகைக்கு உட்பட்ட
ராஜாங்கத்தின்
எல்லைக்கோடுகள்
புலப்படாத நிலவெளியில்
கனவுகள் யாவும்
உயிர் பெற்று
உலவிக்கொண்டு இருக்கின்றன...
___பாரதிக்குமார்

24-07-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...