வியாழன், 4 ஆகஸ்ட், 2022

 


உனக்கு நினைவஞ்சலி செலுத்த

எங்களைவிடப் பொருத்தமானவர்கள்

எவருமில்லை...

சகலருக்கும் சமநீதி சாத்தியமில்லை
என்பதால் நீதியையே
தூக்கிலிட்டு விட்டோம்...
சுதந்திரமாக நடப்பதை
நண்பகலிலேயே அச்சமாக்கிவிட்டோம்...
நள்ளிரவைக் கனவிலும்
பெண்கள் நினைப்பதே இல்லை...
ஓட்டளித்தவர்களை ஒட்டுத்துணியோடு
உன்னைப்போலவே மாற்றிவிட்டோம்...
கம்பீரமான செங்கோல்களை வளைத்துக்
கைத்தடியாக்கித் தரையூன்றித்
தேசத்தைக் குனிந்த தலையோடு
நடக்க வைத்துவிட்டோம்...
கொஞ்சநஞ்ச பற்களோடு திரிந்தவர்களையும்
பொக்கையாகவும் மொக்கையாகவும்
நிற்க விட்டுவிட்டோம்...
எத்தனை அடித்தாலும்
தாங்குவதே அஹிம்சை எனும்
தாரக மந்திரத்தை
மறக்கவே முடியாதபடி
அடிமேல் அடிதந்து வாழ்வையே
சத்திய சோதனையாக்கிவிட்டோம்...

உன்னைக் கொன்றவனிடம் நன்றியுடன் இரு...
அவன் மட்டும் கருணையுடன் இருந்திருந்தால்...
இரக்கமின்றி உன்னை
அனுதினமும் கொன்றபடி இருந்திருப்போம்..
நினைவில் கொள்..
உனக்கு நினைவஞ்சலி செலுத்த
எங்களைவிடப்
பொருத்தமானவர்கள் எவருமில்லை...

02-10-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...