வியாழன், 23 ஜூன், 2022

 

 


பாரதி சின்னப்பயல் என ஈற்றடி தந்து கவி பாடச் சொன்னது சிறுமதி

வுத்திரம் பழகுதல் கவிஞர்க்கு அழகே என்று கடைசி வரியில்

திமிருடைத்து  காந்திமதி நாதனை அதி சின்னப்பயல் ஆக்கினார் பாலகவி...     

 

பாரதத்தின் பாதங்களில்  விலங்கிட்டு பறங்கியர் அடக்கு முறையால்

ணமாகி நின்றதொரு காலத்தில் மருந்தாக வந்த கவி மகாகவி..

தினவெடுத்த தோள்களிலே தமிழ்ச் சுமந்து சமர் புரிந்த வீரகவி..

 

பார் போற்றும் காந்தியார் பார்த்த ஒரு நொடியில் மனம் வியந்து

த்தினம் இவர் பத்திரமாய் வைத்திடுங்கள் எனப் பகர வைத்த 

தித்திக்கும் தமிழின் தலைமகன்.. கவிதைக்கு பேரரசன்..

 

பாப்பாவுக்கும் பாட்டு சொன்னார் பாவையருக்கும் குரல் தந்தார்

த்தமின்றி யுத்தம் செய்த விடுதலை வீரர்கட்கும் கவித்திலகமிட்டார்

தினம் மனிதரோடு கரையும் காக்கை தன் சாதியென்று கரம் கொடுத்தார்..

 

பாற்கடலில் கப்பல்விட்ட தமிழனுக்கு துணை நின்றார்.. விடுதலை தணல் மூட்டிட 

கசியமாய் அவசியமாய் உழைத்த சுப்பிரமணிய சிவாவுக்கும், தீரமாய் களம் கண்ட

திலகருக்கும் தோள் தந்து கவிதை ஆயுதத்தால் உணர்வூட்டினார்..

 

 

பால் போலே மனம் கொண்டு பாதசாரிக்கும் தன் உடை ஈந்தார்

தியென்று நினைத்திருந்த கண்ணம்மாவின் கடைசி கைப்பிடி அரிசியையும்  

தின்னக் கொடுக்க சிட்டுக்குருவி தேடி வள்ளலுக்கும் வள்ளலானார்

 

பார் இதுவென கழுதையை பரபரவென தெருவில் இழுத்துச் சென்றார்

ட்சகன் நான் என சிறார்களுக்கு நூல் அணிந்து அழகு பார்த்தார்..

திசை எட்டும் சென்று கலைச் செல்வம் திரட்டச் சொன்னார்

 

பார்த்தசாரதி ஆலய யானை ஆரத்தழுவியது பாவாண்ட பாவலனை..

சித்தவர்கள் தாசனாகினர் உன்னை உணராமல் தகித்தவர்கள் சாம்பலாகினர் 

திகட்டாத கவி தந்த கவிராஜனே வணங்கினோம் நின் புகழ் ஏந்தினோம் 

 

 

 

 

 

 

 

 

 

 

    

 

    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...