வியாழன், 23 ஜூன், 2022

 


ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்து முடிக்கையில்

ஒரு புத்தகம் உங்களை புரட்டிவிடுகிறது ...

 

பெயர் கூட தெரியாத ஒருவனின்

அத்தனை மன இயல்புகளையும்

மொழிபெயர்த்துவிடுகிறது

அவன் கையிலிருக்கும் ஒரு புத்தகம்...

 

இருக்கையின் ஓரத்துக்கே தள்ளிவிட்டு 

அமர்ந்த பயணியை உக்கிரமாக

முறைக்க எத்தனிக்கையில்

சிநேகமாக புன்னகைக்க வைத்துவிடுகிறது

அவன் பையில் இருந்து தலைகாட்டும் ஒரு புத்தகம்

 

எத்தனை ‘வரி’களையும்

சுமக்கத் தயாராய் இருக்கலாம்

அவை புத்தகங்களில் இருந்து உருவித் தரப்பட்டால்...

 

யாருமற்ற அநாதை என்று எவருமில்லை

புத்தகங்கள் நிரம்பிய இவ்வுலகில்...

 

நூல்கள் இல்லா இல்லத்தில் வசிக்க வேண்டாம்

நூலகம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...