வியாழன், 23 ஜூன், 2022

 

                கலைஞர் எனும் இலக்கிய வேந்தர்



முரசொலியாய் முழங்கித்  தெளிவாக்கி அன்றாட அரசியலை

ழக உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தி கடித இலக்கியம்...

 

முகம் மலர அகம் குளிர அவை சிலிர்த்த

விதைப் பேரருவியாய் செவியரங்க கவி இலக்கியம்..

 

முகவரி அற்றவர்களை எழுதுகோலால் புதுவரி கொண்டு

சக்கிடாமல் இருவரி குறளுக்கு மகுடம் சூட்டிய  குறளோவியம் ..

 

முந்தை மொழி எந்தை மொழி எங்கள் தமிழ் இலக்கணக் காவியம்

ல்லாதவர்களும் கற்றுத் தெளிந்திட தொல்காப்பிய உரை..

 

முதல் தலைமுறை திராவிட இயக்கத் தொண்டனாய் பெரியாரின்

ரம் பிடித்து அண்ணாவின் வழி நடந்த அரசியல் இலக்கியம் நெஞ்சுக்கு நீதி

 

முகம் சுளித்து அகம் வெறுத்து ஒதுங்கிய ஆசாமிகளும்

ண் மலர்ந்து கை தொழுது இமை நனைத்த  இராமானுஜர் காவியம்....

 

முத்தமிழின் மூன்றாம் இலக்கியம் நாடகத்தினால் நாடறிய நாவறிய

ண்ணகியின் கதையை சிலப்பதிகார நாடகக் காப்பியம் ஆக்கிய பெருமகன்..

 

முடியாத தொடர்கதை  எனப் பெயரிட்டாலும் சிறுகதை இலக்கியம் அவர்

ண்ணடக்கம்.. கைவசம் தமிழ் இருக்கையில் அவர்க்கு எல்லாம் கையடக்கம்...

 

முத்துக்குவியல் கடலில்.எனில் எழுத்துக் குவியல் கட்டுரையில் தான்...

ளத்தில் நின்று காலத்தை வென்ற நினைவைச் செதுக்கிய கட்டுரை இலக்கியம்..

 

முழங்குதலே தமிழனின் சிம்மக்குரல் மன்றத்தில் நம்குரலாய் பராசக்தி குணசேகரன்  

டல் நீர் உப்பானது அகதியின் கண்ணீரால் என அன்றே பதிந்த திரை இலக்கியம்

 

முன்னோர் சென்றது தடமானது பின்னர் வழியாகி, பாதையாகி சாலையானது

லைஞர் கடல் கடந்த கதை இனியவை இருபது பயண இலக்கியமானது..

 

முனை மழுங்கி திசை மறந்த தமிழினத்தை தென்பாண்டி சிங்கமாக தனை உயர்த்தி

ணை தொடுக்கும் வில்லாக உணர்வெழச் செய்திட்ட  வரலாற்று இலக்கியம்..

 

முள்ளாக கல்லாக எழுத்துக்கு நெருக்கடி நிலை வந்தாலும் ஒளியாமல் மறையாமல்

னலாக அனலாக ஒடுக்கப்பட்டோர் குரலாக பொறியாக உரைவீச்சு இலக்கியம்..

 

முத்துவேலர் மகனாகிய  முத்தமிழ் அறிஞர் அத்தனை இலக்கியத்தையும்

ன்னித்தமிழ் உலகுக்கு கையளித்தார் இலக்கிய வேந்தனாய் நிலைத்து நிற்கின்றார்.

 

குறிப்பு:

முடியாத தொடர்கதை, கண்ணடக்கம் ஆகியன  கலைஞரின்  சிறுகதைத் தொகுதிகள் .. முத்துக்குவியல் என்பது அவரது கட்டுரைத் தொகுப்பு

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

    

  

 

 

 

 

 

     

    

.

      

   

 

 

 

  

 .      

     

     

 

. .

  .  ..

.  . 

   .

  

 

 

 

 

 

       . .

        .

 

 

. .  

 

.

    

..

       

 .   

 

 

 

 

 

 

  .      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...