இராமேஸ்வரத்தின் கரையில்
எல்லோரும் மீன் பிடிக்க
கடலோடியபோது
நீ மட்டும்
தூண்டிலோடு
விண்மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாய்
எல்லோரும் மீன் பிடிக்க
கடலோடியபோது
நீ மட்டும்
தூண்டிலோடு
விண்மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாய்
உன் முதுகில் முளைத்தன
அக்னிச் சிறகுகள்.....
உறக்கங்களைத் துறந்துவிட்டு
கனவுகளின் இமைத் திறக்க
ஒவ்வொரு நொடியிலும் கரைந்தாய் – இன்று
ஒவ்வொரு இந்தியனின்
கலையாத கனவாகி மறைந்தாய்
கலாம் என்பதை
காலம் என்றும் உச்சரிக்கலாம்
எல்லா காலத்துக்குமான
இணையற்ற ஆளுமை என்பதால்...
இனி-
பகுத்தறிவாளனும் சொல்லக் கூடும்
இராமேஸ்வரம் புனிதத் தலமென்று.....
அருமையான அஞ்சலி......
பதிலளிநீக்குஎன்றும் அவரது பெயர் நிலைத்திருக்கும்.....
உங்களது இக்கவிதையை எனது இன்றைய ஃப்ரூட் சாலட் பதிவில் “படித்ததில் பிடித்தது” தலைப்பில் சேர்த்து இருக்கிறேன். தங்களது தகவலுக்காக.....
பதிலளிநீக்குமிக்க நன்றி .. தங்கள் வலைப்பூவில் வெளியிட்டமைக்கும் .. தகவல் தெரிவித்தமைக்கும்..
நீக்குஅருமையான கவிதாஞ்சலி...
பதிலளிநீக்கு