இன்றும் சூரியன் உதிக்கிறது
இன்றும் கிழக்கு வெளுக்கிறது
இன்றும் காற்று வீசுகிறது
இன்றும் நிலா வரும்
எல்லா நாட்களையும் போல்
இன்றும் கடந்து போகும்
ஆனாலும்,
இன்று எங்களுக்கு இனிய தினம்!
‘மதுமிதா' என்ற தங்க மகள்
எங்கள் வீட்டில் பிறந்த தினம்!!
மற்ற யாருக்கும் நீயும் ஒரு பெண்
எங்களுக்கோ ‘நீ' தான்
நாங்கள் வாழ்ந்த வாழ்வின் அடையாளம்!
எங்களின் ‘மகள்' என்று
இன்று ஊர்சொல்லும்
நாளை
‘ப்ருத்வி மதுமிதா'வின் பெற்றோர் என்று
இந்த உலகம் சொல்லட்டும்!
நாட்களைக் கழிக்க
பிறந்தவள் இல்லை நீ
ஒவ்வொரு நாளையும்
கணித்து சிறக்கச் செய்கிறவள் நீ...
இந்த வானம்
மேகத்தால் நிறைந்திருக்கிறது
இந்த பூமி
கனிமங்களால் நிறைந்திருக்கிறது
மரங்கள் யாவும்
விதைகளால் நிறைந்திருக்கின்றன
புத்தகங்கள்
ஞானத்தால் நிறைந்திருக்கின்றன
மனிதர்கள்
அன்பால் மட்டுமே நிறைந்திருக்கின்றார்கள்
அன்பு மகளே
எங்கள் உலகம்
உன்னால் நிறைந்திருக்கிறது!!
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”
இன்றும் கிழக்கு வெளுக்கிறது
இன்றும் காற்று வீசுகிறது
இன்றும் நிலா வரும்
எல்லா நாட்களையும் போல்
இன்றும் கடந்து போகும்
ஆனாலும்,
இன்று எங்களுக்கு இனிய தினம்!
‘மதுமிதா' என்ற தங்க மகள்
எங்கள் வீட்டில் பிறந்த தினம்!!
மற்ற யாருக்கும் நீயும் ஒரு பெண்
எங்களுக்கோ ‘நீ' தான்
நாங்கள் வாழ்ந்த வாழ்வின் அடையாளம்!
எங்களின் ‘மகள்' என்று
இன்று ஊர்சொல்லும்
நாளை
‘ப்ருத்வி மதுமிதா'வின் பெற்றோர் என்று
இந்த உலகம் சொல்லட்டும்!
நாட்களைக் கழிக்க
பிறந்தவள் இல்லை நீ
ஒவ்வொரு நாளையும்
கணித்து சிறக்கச் செய்கிறவள் நீ...
இந்த வானம்
மேகத்தால் நிறைந்திருக்கிறது
இந்த பூமி
கனிமங்களால் நிறைந்திருக்கிறது
மரங்கள் யாவும்
விதைகளால் நிறைந்திருக்கின்றன
புத்தகங்கள்
ஞானத்தால் நிறைந்திருக்கின்றன
மனிதர்கள்
அன்பால் மட்டுமே நிறைந்திருக்கின்றார்கள்
அன்பு மகளே
எங்கள் உலகம்
உன்னால் நிறைந்திருக்கிறது!!
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”
மதுமிதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குஉங்கள் செல்ல மகளுக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குஅன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு வாழ இனிதே வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ...உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குமதுமிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ...உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குகவிஞர் பாரதிக்குமார் அப்பாவாய் கிடைத்தடும் பேறு பெற்ற மதுமிதாவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிஞர் பாரதிக்குமார் அப்பாவாய் கிடைத்தடும் பேறு பெற்ற மதுமிதாவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்கு