திங்கள், 28 ஜூன், 2010

August Rush

இசை என்ற பொருத்தமான சொல்லை எப்படி யார் நம் மொழியில் சூட்டினார்கள் என்பதை எண்ணி பல முறை வியக்கிறேன். “இசை“ என்று உச்சரிக்கும் போதே ஒரு “ஆணை“ இடுவது போல் எப்படிப்பட்டவரும் உடன்பட்டு இசைந்து விடுவர். எந்த ஒரு கலைக்கும் இல்லாத சிறப்பு “இசை“க்கு உண்டு. கேட்கிற சில நொடிகளில் நீங்களும் ஒரு வாசிப்பாளராக, பாடுபவராக உணர்கிற அல்லது மாற முயற்சிக்கிற அற்புதம் நிகழ்ந்தே தீரும். 


நாம் துக்ககரமாக இருக்கின்ற ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ சில உனனதமான இசை எங்கிருந்தோ மிதந்து வந்து வாழ்வின் அற்புத தருணங்களை, இருத்தலின் நியாயத்தை உணர்த்தியிருக்கும்.

மிக அற்புதமான விஷயம் என்று நீங்கள் கருதும் ஒன்றை வேறொருவர் “அற்புத“மென கருதலாம். நீங்கள் துச்சமென நினைக்கும் ஒன்றை இன்னொருவர் கூத்தாடி கொண்டாடலாம். ஆனால் இசையை வெறுப்பவர்கள் என்று எவரேனும் உண்டா என்ன?

எல்லோராலும் கைவிடப்பட்டவர்களைக் கூட இசை தன் தோளில் சுமக்கிறது என்பதை இரயில் பயணங்களில் குறுக்கிடும் பார்வையற்ற பாடகர்களை காணும் போதெல்லாம் உணர்கிறேன். “அகதிகள்“ என்று யாரை குறிப்பிடுவோம்? ஒரே தேசத்திலிருந்து இன்னொரு தேசத்துக்கு ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு துரத்தப்பட்டவர்களை மட்டும்தானா?

பெற்ற தாயும், தகப்பனும் உயிருடன் இருக்கும் போதே சமூக பொருளியல் காரணங்களால்  கைவிடப்பட்டு வாழும் குழந்தைகள் கூட ஒரு வகையில் அகதிகள்தானே...

கணநேர பாலுணர்வு தூண்டலால் கருவாகி பின் அற்ப காரணங்களால் பிரிய நேரிட்ட ஒரு பெண்ணின் குழந்தைதான் “இவான்“. அழிக்கப்பட்ட அடையாளத்தை இசை மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு இயங்குகிற சிறுவனின் கதையே ஆகஸ்ட் ரஷ்.

ஒரு பயணச்சீட்டின் பின்புறம் எழுதிவிடக்கூடிய எளிமையான கதை. காலம் காலமாக நாம் தமிழ்ப்படங்களில் பார்த்து வரும் “மையக்கரு“ தான் இந்த படத்தின் கதையும். தொழில் நுட்ப ரீதியாக கலை ரீதியாக இந்த பழக்கப்பட்ட கதையை ஒரு ரம்மியமான திரைப்படமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் சிறப்பு.

லூயிஸ் என்பிற கிதார் கலைஞனும், லைலா என்கிற செலோ வாத்திய கருவியை இசைக்கும் பெண்ணும் எதேச்சையாக ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். செலோ(Cello) என்பது வயலின் குடும்பத்தைச்சார்ந்த இத்தாலிய நாட்டு இசைக்கருவி. உட்கார்ந்தபடி  ஒரு ஆள் அதை வாசித்தால் அவர் உயரத்துக்கும் இருக்கும். பார்த்த மாத்திரத்தில் இருவரும் ஈர்க்கப்பட்டு உடல் ரீதியாகவும் அதே நிமிடத்தில் இணைந்தும் விடுகிறார்கள். விடிந்த பிறகு லைலாவின் தந்தை அவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விடுகிறார். லூயிஸ் சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்று விடுகிறான்.

றந்து விட்டதாக லைலாவிடம் பொய் சொல்கிறார்.
ஓர் இரவில் ஏற்பட்ட உறவில் கர்ப்பமாகிறாள் லைலா. கலைக்க மறுத்து குழந்தையை சுமக்கும் லைலா ஒரு விபத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை லைலாவின் தந்தை போலியாக லைலாவின் கையெழுத்திட்டு அனாதை இல்லத்தில் சேர்த்து விடுகிறார். குழந்தை

அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை இவானுக்கு இசையின் மீது அளப்பரிய ஈடுபாடு. 11 வயது நிரம்பும் போது குழந்தை நல சமுக சேவகர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவனது இசை ஆர்வம் மற்றும் அவனது பின்னணி பற்றி அறிந்து இரக்கம் ஏற்பட்டு  தன்னை  நியுயார்க்கில்  வந்து சந்திக்கும் படி முகவரி அட்டையை தருகிறார். நியுஜெர்சியில் உள்ள அனாதை  இல்லத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி நியுயார்க் செல்கிறான்.  இவான் ஆனால் முகவரி அட்டையை தொலைத்த காரணத்தினால்  அவரை சந்திக்க முடியாத  இவான் சாலையோரம் கிடார் இசைத்து  பிச்சையெடுக்கும் ஆர்தரை சந்திக்கிறான்.

ஆர்தரிடம்  நட்பு  பாராட்டி  அவனோடு இரவில் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்கிறான். அது ஒரு  பாழடைந்த பழைய நாடக கொட்டகை அங்கு ஆர்தரைப் போன்ற அனாதை குழந்தைகள்  இசைக்கருவிகளை வாசித்து பிச்சையெடுப்பவர்களாக  இருக்கிறார்கள்  அவர்களை  விசார்ட் என்பவன் பாராட்டி பராமரித்து வருகிறான். விசார்டிடம் தனக்கு கிடார் வாசிக்க கற்றுத்தருமாறு கேட்கிறான். இவான். யாருக்கும் தெரியாமல் இரவில் கிடார்-ஐ பயிற்சி இல்லாமல் இவான் வாசிப்பதைக் கண்டு இவன் சாதராணமான ஆளில்லை என்று புரிந்து கொண்டு அவனுக்கு கிடார் வாசிக்க கற்றுத் தருகிறான். குழந்தைகளை அடைத்து வைத்து பிச்சையெடுப்பது பற்றி அறிந்த காவல்துறை அரங்கிற்குள் ரெய்டு செய்கிறது. அங்கிருந்து தப்பித்த இவான் ஒரு சர்ச்சிற்குள் சென்று மறைகிறான். அங்கு இசைக்கப்படும் ஒரு பாடலில் மயங்கி அங்கேயே தங்கி விடுகிறான். இசைக்குழுவில் பாடும் ஹோப் எனும் கறுப்பின சிறுமி அவன் பியானோ வாசிக்க அனுமதிக்கிறாள். முன் பின் தொட்டறியா பியானோவில் சுற்றுப்புற சப்தங்களை வைத்து இசைக்குறிப்புகளை உருவாக்குகிறான்.

அதிசயித்துப்போன ஹோப், சர்ச் பாதிரியாரிடம் காண்பிக்கிறான். பிரமித்துப்போன அவர் இவானை புகழ்பெற்ற ஜுலியார்ட் இசைக்கல்லூரியில் சேர்க்கிறார். அங்குதான் அவன் ஆகஸ்ட் ரஷ் என்று பெயரை மாற்றி பதிவு செய்கிறான்.

விடம் மகன் உயிரோடு நியுஜெர்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருப்பதாக கூறுகிறார். மகனைத் தேடி வரும் லைலாவிடம் இவான் யாரிடமும் சொல்லாமல் வெளியேறிய தகவல் சொல்லப்படுகிறது. குழந்தை நல சமூக சேவகர் மூலம் இவானின் புகைப்படம் கி்டைக்கிறது.லூயிஸ் ஒரு நிகழ்ச்சிக்காக நியுயார்க் வருகிறான்.
லைலாவின் தந்தை இறக்கும் தருவாயில் லைலா

மோனிக் இசை நிகழ்ச்சியில் வாசிக்க தேர்வு செய்கிறார்கள். அதே நிகழ்ச்சிக்கு வர இவானின் நம்பிக்கையைப்போல இசை அவர்களை இணைக்கிறது.
ஜுலியார்ட் கல்லூரியிலும் இவான் புதிய இசைக்குறிப்புகளை உருவாக்கும் வேகத்தைப் பார்த்து அவனை புகழ்பெற்ற பில் ஹார்

படத்தின் ஆரம்பக்காட்சியில் இவான் ஒரு வயல் பிரதேசத்தில் நிற்பான். காற்றின் இசைக்குறிப்புகளுக்கு ஏற்ப பச்சை பசேலென்ற பயிர்கள் நடனமாடியபடி இருக்கும். பயிர்களின் நடுவே நின்று இவான் ஒரு கோர்ப்பாளான் போல கைகளினால் இசையை சைகைகள் செய்யும் காட்சியில் ஒளிப்பதிவும், இசையும் நேர்த்தியான கச்சேரியை கண்முன் நிறுத்துகிறது. கண்ணுக்கு விருந்து என்ற சொல்லுக்கு பொருந்தும் காட்சி அது. காட்சி ஊடகங்களில் ஒரு உணர்வை எப்படி நேர்த்தியாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இந்த காட்சி மிகப்பெரும் உதாரணம். திரைப்படக்கலை பயிலும் மாணவர்கள் அவசியம் தங்கள் கவனக்குறிப்பில் கொள்ள வேண்டிய காட்சி இது. இவானின் உலகமே இசைதான் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரலாம்.

பறவைப் பார்வை எனப்படும் Bird’s Eye View கோணத்தில் கேமரா மெல்ல நகர்ந்து செல்ல கூடவே அதே உயரத்துக்கு நம்மை சுமந்து கொண்டு இசையும் உயர உயர காட்சி இலக்கணத்தில் சாட்சி கவிதை அது. ஜான் மெத்தனானின் கேமரா பசுங்கதிர்களின் ஈர்ப்பசைவைக் கூட உணர வைக்கிற அளவு துல்லியமாக பதிவு செய்திருக்கிறது.

தன்னைத் துருத்திக்கொள்ளாமல் கதையின் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ற லைட்டிங் பயன்படுத்தியிருக்கிறார் மெத்தினன். குறிப்பாக ஆர்தர் போன்ற சிறார்கள் அடைக்கப்பட்ட இடத்தினை குறைந்த மஞசள் வெளிச்சத்திலும் இவானும், லூயிஸும் கிடார் வாசிக்கும் இடத்தில் பளிச் சென்ற வெள்ளை பின்னணியிலும் படமாக்கியிருக்கிறார்.

லூயிஸ் நியுயார்க் வரும் காட்சியில் தூவும் பனிச்சாரல் இடையே லூயிஸ் நடந்து செல்லும் போது நீங்களும் நனைவீர்கள். ஒரு வேளை நீங்கள் துவட்டிக்கொள்ளவும் முயற்சிப்பீர்கள்.

சர்ச்சில் அடைக்கலமான இவான் பியானோ வாசி்க்கும் காட்சி தொழல்நுட்ப திருவிழா என்றே கூறலாம். சர்ச்சின் சுவர் துவாரங்கள் வழியே ஊடருவும் ஒளிக்கற்றை இவான் மற்றும் பியானோ மீது படர சச்சின் வெளியே கேட்கும் ஒவ்வொரு அசைவும் இசையாக பரிணமிக்கிறது. கூடைப்பந்து தரையில் படும் சப்தம், கண்ணாடி கோப்பையின் விளிம்பில் நீர் சுழலும் சப்தம், கால்கள் நடக்கும் சப்தம் தெரு வியாபாரியின் மணி சப்தம் இப்படி எலலாம் இசையாகிறது. ஜான் கேஜ்ன் பிரபலமான சொல்லாடலான் All Sounds are Music (எல்லா ஒலியும் இசையே) என்பதை அடிப்படையாக் கொண்ட காட்சி இது.

படத்தில் மார்க் மன்சினாவின் இசை பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. சர்ச்சில் வான நுழையும் பொது கறுப்பினக்குழுவினர் பாடும் Rise it Up’ என்ற பாடல் எவரையும் மயங்கவைத்து விடும். குழுவில் பாடும் ஹோப் என்ற சிறுமியின் முகபாவங்களும் அங்க அசைவுகளும் அபாரமானவை. இந்த பாடல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. விருது கிடைக்காவிட்டாலும் மிக ரம்மியமான பாடல் என்பதில் எவருக்கும் வேறு கருத்து இருக்கமுடியாது. இதைப்போல ஆர்தர் பாடும் Father” என்கிற பாடல் உயிரை ஊடுருவும்.


எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல இறுதி காட்சியில் இசைக்கப்படும் “Rhapsody” எனப்படும் சிம்பொனி இசைக்கோளம் நம் நரம்புகளில் ஓடி ஒவ்வொரு அணுவையும் துடிக்கச் செய்யும் இசை மிக அதிகமான வயலின் கருவிகள் அதில் பயன்படுத்தப்பட்டதால் அதில் இந்தியத் தன்மை இருப்பதும் ஒரு காரணம்.

எடிட்டிங் சில இடங்களில் குறைபாடுகளுடனும் சில இடங்களில் நிறைவாகவும் உள்ளது. இவான் வயல்வெளிகளில் வாசிக்கும் காட்சியில் ஜம்ப் கட் ஆகி அனாதை இல்லத்துக்கு வருவது பிழை. சர்ச் காட்சியி்ல் பியானோ வாசிக்கும் இடத்தில் நேர்த்தி படத்தின் ஒலிப்பதிவு மிக துல்லியம்.

இத்தனை தொழில் நுடப சிறப்புகள் இருந்தும் படத்தை உச்சியில் வைத்து கொண்டாட முடியாத படிக்கு தடுப்பது மிக பலவீனமான கதையும் ஓட்டைகள் நிறைந்த திரைக்கதையும்தான்.

சந்தித்த நிமிடத்தில் உறவு அதன் விளைவாக கர்ப்பம் தமிழ்படங்களில் உள்ளது போல் அப்பாவின் கெடுபிடி ரொம்ப சுலபமாக தத்து கொடுத்துவிடுதல், மருத்துவமனையில் எவருமே இது பற்றி லைலாவிடம் சொல்லாதது. 11 வருடங்கள் வரை காதலியைத் தேடாத லூயிஸ் அதன் பிறகு செல்போனில் முயற்சிப்பது எந்த இசைக்கருவியையும் முன்பின் தொடாமலே ராகத்துடன் வாசிப்பதும் இசைக்குறிப்புகள் எழுதுவதும் என்று ஏகப்பட்ட லாஜிக் இல்லா மேஜிக்குகள்.

நியுயார்க் டைம்ஸ்-ன் பிரபல திரை விமர்சகர் ஸ்டீபன் ஹோல்டன் இரு ஒரு நகைச்சுவையான மாயாஜால கற்பனை என்று விமர்சித்தார். Docwell எனும் இசை விமர்சக குழு உண்மையான இசைக் கலைஞர்களை இது இழிவுப்படுததுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

எந்த ஒரு கலை இலக்கிய படைப்புக்கும் உயிர் அதன் உள்ளடக்கம்தான். திரைப்படங்களை பொருத்தவரை கதைதான் பிரதானம் மற்ற அனைத்து தொழில் நுட்பங்களும் கதைக்கு நேர்மையாக உற்ற துணையாக இருக்க வேண்டும்.

தொழில் நுட்ப காரணங்களால் ஒரு படம் ஓடினால் அது விதிவிலக்கே தவிர உதாரணமில்லை. திரைப்படக்கலை பயில்பவர்கள் இந்தப்படத்தை காட்சியமைப்பை உருவாக்க தெரிந்து கொள்ள அவசியம் பார்க்க வேண்டும்.

ஜுன் மாதம் 20ம் தேதி ஆண்டு தோறும் உலக அகதிகள் தினமாகவும், ஜுன் மாதம் 21ம் தேதி உலக இசைதினமாகவும் அனுசரிக்கப்படுவதால் பெற்றோர்களால் கைவிடப்பட்டு அகதியைப்போல் திரியும் ஒரு குழந்தை இசை மூலம் அவர்களை அடையும் இப்படத்தை இம்மாதம் குறிப்பிட்டுள்ளேன்.

துயரங்கள் சூழந்த இந்த வாழ்க்கையில் இழப்புகள் குறித்த கவலைகள் நம்ம இநுக்கிய படியே இருக்கின்றன். என்றாலும் அன்னையின் பாரபட்சமற்ற கனிவான பார்வை போல் இயற்கையின் வனப்பு மிக்க காட்சிக்கும் மனத்தெம்பூட்டும் ஒரு தந்தையின் கரங்கள் போல தமூட்டும் இசையின் வருடல்களும் இருக்கும் வரை நம்மில் எவரும் அனாதை இல்லை என்றுதான் தோன்றுகிறது.

6 கருத்துகள்:

 1. அடப்பாவி........இது ஆரு நெய்வேலி பாரதிக்குமாரா? என்ன கொடுமை .........நானு உங்க எழுத்த எம்புட்டு வருஷமா படிச்சிக்கிட்டு இருக்கேன் சுகன்ல. ஒரு வார்த்தை அதுல போடப்படாதா உங்க ப்ளாக் பற்றி. நேத்து
  எதேச்சையா உங்களப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன் சுகன்கிட்ட..

  பதிலளிநீக்கு
 2. அப்பதேன் சொன்னாரு..’ஆமாங்க 6 மாசமாச்சே அவுரு ப்ளாக் ஆரம்பிச்சின்னு’.. என்ன சார் நீங்க. சரி வுடுங்க. கொஞ்சம் கொஞ்சமா அதுல வந்த எல்லாத்தையுமிதுலயும் ஏத்திபுடுங்க..கீதப்ரியன் சொல்லிதான் வந்தேன்...பாருங்க எனக்கு தெரிந்த ஒருத்தர இன்னொருத்தர் சொல்லி... :)

  பதிலளிநீக்கு
 3. அப்பிடியே நீங்க எடுத்த புகைப்படத்தயெல்லாம் கூட போடுங்க. திரட்டிகள்ல இணைச்சுடுங்க. இனி உங்க ஆடுகளம் இது. நாங்க இருக்கோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி மயில் ராவணன் சார் உங்களை நன்றாக தெரியும் சார். உங்கள் ப்ளாக் யும் தொடர்ந்து வாசிக்கிறேன் மிக சிறப்பான உங்கள் பதிவுகள் இயல்பான மொழியில் அற்புதமாக இருக்கின்றன ஆனால் உங்களைப் போல உடனுக்கு உடன் கருத்துரைகளை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன் அதுதான் நமக்குள் இன்னொரு நல்ல நண்பரின் மூலமான அறிமுகம், கீதப்பிரியன் அற்புதமான நண்பர் நல்ல நுட்பமான கருத்துப் பதிவர். என்னுடைய ப்ளாக் ௨௦௦8 இல் துவக்கப்பட்டது என்றாலும் இப்போதுதான் அதிகம் பதிவுகள் இடுகிறேன் தொடர்ந்து பரிமாறிக்கொள்வோம் நம் நட்பையும், கருத்துகளையும்.. மீண்டும் நன்றி

  பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...