வியாழன், 1 ஜூலை, 2010

சிறகு உதிரும் நீலப்பறவை

அம்மாவின் கண்ணீர் உப்பேறிக் கறைபடிந்த
எழுத்துக்களை முன் போல் காணமுடிவதில்லை
துணை எழுத்துக்களின் துணையில்லாமல்
நலம் பேணும் கடைசித் தம்பியின் விசாரிப்புகளும்,
விவாதங்களுடனும், விளக்கங்களுடனும்
நீளும் நண்பர்களின் மடல்களும் நின்று போயின!

விரலசைவில் சுலபமாய் ‘ஹலோ'க்கள்!

தொலைபேசியின் கவர்ச்சி சிணுங்கலில்
தபால்காரரின் மணியோசை மெலிந்துபோனது
ஊர்கள் சுருங்கி, உலகம் சுருங்கி
ஒயர்களாய் நெளிந்தன

எண்களை சுழட்ட, சுழட்ட
சேமிப்பிலிருந்து கரைந்தவை சில நூறு மட்டுமல்ல....
ஞபகங்களாய் வைத்திருக்க
காலவரிசைப்படி கடிதங்களும்தான்..

4 கருத்துகள்:

  1. இனிய எழுத்தாளருக்கு வணக்கம்.
    வலைதளத்தில் வண்ணத்தமிழ் படைப்புகள் ஏராளமாக வலம் வந்து கொண்டிருக்கும் அற்புதத்தை சமீபத்தில்தான் கணினியில் கண்டு வியந்தேன்
    அதுபோன்ற பங்களிப்பை நம்மாலும் செய்ய முடியும் என்பதை தங்களின் தனிப்பெயர்த்தளத்தில் ஒளிர்கின்ற அருமையான படைப்புகள் வாயிலாக இப்போது வாசித்து பிரமிக்கிறேன். தங்களின் சமூகத்தொண்டும்,தமிழ் இலக்கியத் தொண்டும் தொடர்ந்து வெற்றிவாகை சூட-பலரது உள்ளத்தில் பதிவாகிப் பயனளிக்க- இதய நல் வாழ்த்துகள்!
    -மாலாஉத்தண்டராமன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. தொலைபேசியின் கவர்ச்சி சிணுங்கலில்
    தபால்காரரின் மணியோசை மெலிந்துபோனது
    ஊர்கள் சுருங்கி, உலகம் சுருங்கி
    ஒயர்களாய் நெளிந்தன
    ஆஹா.. கடிதங்கள் தொலைந்த வலி மறந்து கவிதையின் தாக்கம்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ரிஷபன் உங்கள் வலைப்பூ வடிவமைப்பு வேலைகளுக்கு இடையிலும் வாசித்தலும், விமர்சித்தலுமாக தொடர்ச்சியான உங்கள் இலக்கிய பணி வியப்பூட்டுகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...