வியாழன், 23 ஜூன், 2022

 


மடியும் நொடி

                        -நெய்வேலி பாரதிக்குமார்

 

குளத்தில் விழுந்த கல் 

தண்ணீரைக் கரைக்கிறது

படரும் ஈரமாய்...

 

மண்துகளில்

மெல்லப் படிகிறது

ஒரு மழலையின் பாதச்சுவடு...

 

காற்றின் இழையில் தேங்குகிறது

சற்று முன் முகிழ்த்த

மரமல்லியின் வாசம்..

 

குறுந்தகட்டின் குறுகிய கோடுகளில்

பதிவாகிறது குழலின் குரல்..

 

ஒரு விதையிலிருந்து

பிதுங்குகிறது

மரத்தின் வேர்

 

இது எதையும் நிகழ்த்தாமல்

சட்டென ஒரு நொடி மடிகிறது

என் வாழ்வின் பிடியிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...