ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

வரும்பொருள் உரைத்த சிதம்பரனார் - வானொலி நாடகம்



(27.04.2013 அன்று பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில் மாலை 3.00 மணிக்கு ஒலிபரப்பான எனது வ.உ.சி. பற்றிய நாடகத்தை சில பகுதிகளாக இன்று முதல் பதிவிடுகிறேன்.) 

முக்கிய பாத்திரங்கள் :
                1. ..சி,
                2. சுப்பிரமணிய சிவா
                3. மகாகவி பாரதியார்
                4. மீனாட்சி
                5. ஆஷ் , விஞ்ச் ( வெள்ளைக்காரர்கள் )
                6. வடுக ராமன்
                7. பாண்டித்துரை
                8. மலபார் மாப்பிள்ளை
                9. ஜெயிலர்
                10. சிறுவன் சிதம்பரம்

துணை பாத்திரங்கள்
                வழக்கறிஞர்,
                சிறுவனின் தந்தை
                கைதிகள்
                கோர்ட் பார்வையாளர்கள்
                               

                                                               
காட்சி - 1
           
பாத்திரங்கள் :
                                    தந்தை, , ஐந்து வயது மகன்

அப்பா:

                தம்பி சிதம்பரம், ஏம்பா இப்படி சோகமாயிருக்கே?

மகன்:
எங்க ஸ்கூல் ஃபங்ஷன்ல மாறுவேஷப் போட்டி நடக்கப்போவுது.                               கலந்துக்கற  மத்த எல்லாரையும் அவங்க இஷ்டத்துக்கு                                        செலக்ட் பண்ணிக்க சொல்லிட்டாங்க. என்னை மட்டும் எங்க                  மிஸ்ஸுஒன் பேருதான் சிதம்பரமாச்சே... நீ . . சி. வேஷம்                              போடு' அப்படின்னு சொல்லிட்டாங்க
:

இப்ப இருக்கற காலகட்டத்துல நாம . . சி. மாதிரி    வேஷம்தான் போட முடியும். வாழ்ந்து காட்ட முடியாது.
:
                என் ஃப்ரண்ட்ஸ்ங்க டிஸ்கோ டான்ஸர், பிரேக் டான்ஸர்                                        வேஷமெல்லாம் போட்டுட்டு வந்து டான்ஸ் ஆடப்போறாங்களாம்.

:
மாறுவேஷப் போட்டி வைக்கிற நோக்கமே மகத்தான சேவை செஞ்ச மகான்களை பிள்ளைங்க  மனசுல பதிய வைக்கிறது    தான். இந்த மாறுவேஷப் போட்டி எல்லாம்  இல்லேன்னா நாம அவங்களையெல்லாம் மறந்தே போயிருப்போம்.

:
ஏம்ப்பா எனக்கு சிதம்பரம்ன்னு பேரு வைச்சீங்க? எங்கூடப்               படிக்கிற பசங்களெல்லாம்அப்போ உன் தம்பி பேரு கடலூரா...               கள்ளக்குறிச்சியா'ன்னு கேட்டு கிண்டல் பண்ணுறாங்க.

அப்பா :
      நம்ம இந்திய மண்ணுல பிள்ளைங்களுக்கு பேர் வைக்கிறதுல கூடஒரு ஆழமும்அர்த்தமும் இருந்திச்சு,  இன்னமும் இருக்கு..  உன் பேருதான் உங்க  டீச்சருக்கு  ..சியை          ஞாபகப்படுத்தியிருக்கு ..

மகன் :
                ..சி. என்ன பண்ணினாரு?
அப்பா :
 வெள்ளைக்காரவங்க வியாபாரம் பண்ணத்தான் நம்ம                            நாட்டுக்குள்ள வந்தாங்க நாமதான் வந்தாரை வாழவைச்சுப்                                பழக்கமாச்சே... தூக்கி உச்சியில வைச்சோம். அவங்க நம்ம       தலையிலஏறி நம்மையே அதிகாரம் பண்ண                 ஆரம்பிச்சிட்டாங்க. நாம அடிமைகளா வாழ முடியாது.             சுதந்திரத்தை அடைஞ்சே தீரனும்னு பல தியாகங்கள் செஞ்சி போராடுனவங்க பல லட்சம் பேரு. அதுல லட்சத்துல ஒருத்தரா நின்னுவெள்ளைக்காரங்கள திணறடிச்சவரு ..சி.
மகன்:
                வெள்ளைக்காரங்கன்னா?

அப்பா:
                இங்கிலாந்திலேருந்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரங்க.
மகன்:
                அவங்க என்ன பண்ணினாங்க?

அப்பா:
ம்... ம்... இப்போ, நம்ம தெரு முனையில பெட்டிக்கடை                 வைச்சிருக்காரே, மணியண்ணன்... அவருகிட்ட தான் நீ நோட்டுப் புத்தகமெல்லாம் வாங்குறே... அவரு திடீருன்னு  ஒருநாள்நான் சொல்றது தான் நீ படிக்கணும்; நான்    சொல்றப்பதான் நீ விளையாடணும்' அப்படின்னு சொன்னா  நீ  ஒத்துக்குவியா?

மகன்:
                அவரு யாரு சொல்றதுக்கு? நான் என் இஷ்டத்துக்கு தான்   இருப்பேன்.

அப்பா:
அதேதான். நீ கடைக்கு போறச்சேயெல்லாம் இப்படியே அதிகாரம் பண்ணினா நீ என்ன செய்வே?
மகன்:
அவர் கடைக்குப் போறதையே நிறுத்திடுவேன். அவர் கடையில எதுவும் வாங்க     மாட்டேன்.
அப்பா:
அதைத்தான் நம்ம ..சி. யும் செஞ்சாரு. ஆனா அதுக்கு அவருக்கு கிடைச்ச தண்டனைதான் சிறைவாசம், சித்திரவதைகள். அவரு பட்ட கஷ்ட நஷ்டங்கள்... அப்ப்பப்பா...!
மகன்:
                ..சி.ன்னா என்ன அர்த்தம்பா?

அப்பா :
ம்.... வந்தேறிகளை உலுக்கிய சிதம்பரனார் னு சொல்லலாம்...        வந்தேமாதரம் உணர்த்திய சிதம்பரனார்னு சொல்லலாம்.. வரும்         பொருள் உரைத்த    சிதம்பரனார்னும் சொல்லலாம்..
மகன்:
                புரியலையே
அப்பா :
 அதெல்லாம் புரியனும்னா அவரோட வரலாற்றை                                                        சொல்லனும்..
மகன் :
                அட... கதையா சொல்லுங்கப்பா... சொல்லுங்க...

( காட்சிகள் பின்னோக்கிப் போகின்றன.. ..சியின் காலத்துக்கு நகர்கிறது)

(...அடுத்த பதிவில் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...