புதன், 6 ஆகஸ்ட், 2008

தொலைபேசி சிணுங்கியது

எத்தனை முறை இம்சித்திருக்கிறது சாப்பிடுகையில் நடுவே...
ஒற்றையாய் குளிக்கும்பொழுது வெளியே....
நல்ல உறக்கத்தை தழுவும் சமயத்தில் தொணதொணவென்று
காது கேளாமல் அடம்பிடிக்கும் ஒரு பிச்சைக்காரனைப்போல்
சப்திக்கும் இந்த தொலைபேசி....
இப்பொழுதெல்லாம் உன் அழைப்பை சுமந்துவருகையில்புரிந்து கொள்ளமுடிகிறது எத்தனை
அழகானச் சொற்றொடர் ‘தொலைபேசி சிணுங்கியது' என்பது.....

2 கருத்துகள்:

  1. இதே உணர்வுகள் எல்லாருக்கும்தான்.. கவிதையாக்க உங்களால் மட்டுமே!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ரிஷபன் உங்களால் இதை விட இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்று எனக்கு தெரியும் . மீண்டும் நன்றி . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...