கள்வனுக்காகக் காத்திருக்கிறேன்
பூட்டுகளுக்கான கொத்துச்
சாவியைத்
தேடிக்கொண்டிருக்க வேண்டாம்
கதவுகளைத் திறந்தே
வைத்திருக்கிறேன்
அமாவாசை இரவுக்காக
காத்திருக்கவும் வேண்டாம்
சுட்டெரிக்கும் உச்சி
வெயில் கூட
சாதகமானதுதான்..
ஆயுதங்களைத் தீட்டிக்கொண்டிருக்கும்
அவசியமும் இல்லை
நிராயுதபாணியாகவே வருவது
உத்தமம்..
சுவரேறிக் குதிக்கும்
வித்தை எதுவும்
தேவைப்படாது
கண்ணி வெடி
இருக்குமோ
என்ற அச்சமும்
தேவையில்லை
காவல்துறையிடம் புகார்
தரும்
உத்தேசம் எதுவுமில்லையென
உத்தரவாதம் தருகிறேன்
வீட்டிற்கு வருவோர்
போவோரிடம்
ஜாடைமாடையாகக் குறிப்புகள்
தருகிறேன்
எல்லா அறைகளையும்
துருவித்துருவிப் பார்ப்பவர்கள்
கூட
பொக்கிஷங்கள்
நிரம்பியிருக்கும் அந்தஅறையின்
நிலைப்படியிலேயே நின்றுவிடுகிறார்கள்
பேசுவதற்கு ஏதுமற்றவர்களும்
என் பொக்கிஷங்களைப்
பற்றி
பேச்செடுத்தால் மௌனிக்கிறார்கள்
எடுத்துப்போகிறவர்களுக்கு ஏதுவாக
என் புத்தக
அறையை திறந்து வைத்திருக்கிறேன்
விலைமதிப்பற்ற வரிகளைத்
திருடிச்செல்லும்
அந்தகள்வனுக்காக இன்னமும்
காத்திருக்கிறேன்..
(உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்)
இன்றைய தினத்திற்கேற்ற பகிர்வு அருமை... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகாலம் உணர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி நன்றாக உள்ளது வரிகள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி அய்யா
நீக்குமிக்க நன்றி அய்யா
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஆகா, திருடிச் செல்ல ஒரு கள்ளியாக நான் காத்திருக்கிறேன்...... கள்வனுக்கு மட்டும் தான் அழைப்பா??????/
பதிலளிநீக்குஅருமையான கவிதை பாரதி... மிக இயல்பாக வந்து விழும் உங்கள் வார்த்தைகள் அசத்தல். நான் வீட்டுக்கு வந்தபோது நீங்கள் மெனக்கெட்டு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.... அவ்வப்போது கவிதை எழுதினாலும் அட்டகாசமாய் எழுதுகிறீர்கள் .........