ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வாங்க, படிக்கலாம்!

     

உழவர்களுக்கு அறுவடை நாள் எவ்வளவு முக்கியமும் கொண்டாட்டமுமாக இருக்கிறதோ அதைப் போன்றதே வாசிப்பதை நேசிப்பவர்களுக்கு புத்தகச் சந்தையில் தத்தம் அறிவின் விசாலத்துக்கேற்ற நூல்களை  தேடிக் கண்டடைந்து வாரிக் கொண்டு வருவது. அறிவை அழகூட்டும் புதுப் புதுப் புத்தகங்களே எங்கள் பண்டிகைப் புத்தாடைகளுக்கான சரியான மாற்று ஏற்பாடாக உள்ளது . சென்னைப் புத்தகச் சந்தையில் நேற்றைய என் அறுவடை உங்கள் பார்வைக்கும்.

1. க.நா.சு. புதுக்கவிதைகள்
                         - ஞானச்சேரி வெளியீடு

2. மார்க்கோபோலோ பயணக் குறிப்புகள்
                       - பொன். சின்னத்தம்பி  - 'அகல்'

3. எண்ணும் மனிதன் -மல்பா தஹான் -
                        தமிழில்: கயல்விழி - 'அகல்'

4. ஒரு தோழியின் கதை -
                   இரா. நடராசன்  - பாரதி புத்தகாலயம்

5. யுரேகா கோர்ட் -
                     இரா. நடராசன்  - விகடன் பிரசுரம்

6. ஹிக்ஸ் போஸான்  வரை இயற்பியலின் கதை
                  - இரா. நடராசன்   - பாரதி  புத்தகாலயம்  
                                                                                   
7.    டார்வின் ஸ்கூல்  - இரா.நடராசன்
                          - பாரதி புத்தகாலயம்

8. ஆயிரம் ஆண்டு அதிசயம்
                      - அமுதன் -தினத்தந்தி

9. மாகடிகாரம் - விழியன்
                 - பாரதி புத்தகாலயம்

10. மனிதக் கதை - பிரபாகர் சான்ஸ்கிரி
                                  - பாரதி புத்தகாலயம்

11. உலக வரலாற்றுக் களஞ்சியம்
              - ஐ. சண்முகநாதன் - விகடன் பிரசுரம்

12. வேங்கைச் சவாரி - கன்னடம்: விவீகி ஷன்பேக்,
                             தமிழில்: ஜெயமோகன் - வம்சி
                                                                                     
13. ஜெயம் (மகாபாரதம் ஒரு மறுபார்வை)
          -ஆங்கிலம்: தேவ் தத் பட் நாயக்
          -தமிழில்: சாருகேசி - விகடன் பிரசுரம்

14. மகாபாரதம் - பிரபஞ்சன்
           -நற்றிணை பதிப்பகம்

15. அயல் மகரந்த சேர்க்கை
      (உலக எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
      -தமிழில்; ஜி.குப்புசாமி - வம்சி

16. அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
       -ஜி.எஸ். எஸ். -விகடன் பிரசுரம்

17. அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்
           -நற்றிணை பதிப்பகம்

18. 6174 - க. சுதாகர் - வம்சி

19. தேம்பி அழாதே பாப்பா - கூ கி வா தியாங்கோ
                தமிழில்: எஸ்.பொ . - 'நிழல்'

20. ஆன்மாக்களின் அடித்தட்டில்
       (பன்மொழிச் சிறுகதைகள்)
      தொகுப்பு: ப.திருநாவுக்கரசு - 'நிழல்'

21. சிலுவையில் தொங்கும் சாத்தான்கள்
                     -கூ கி வா தியாங்கோ
                    -தமிழாக்கம்: அமரந்தா-சிங்கராயர்
                    - தாமரைச் செல்வி பதிப்பகம்

22. நம் நலம் நம் கையில் - பாகம் - 1
          -Dr. தேவேந்திர வோரா - நவநீத் பதிப்பகம்

23. ஆயிரம் உணவு தானிய பதார்த்த மூலிகை குண விளக்கம்
          - முல்லை முத்தையா - NCBH
24. பறளியாற்று  மாந்தர் - மா. அரங்கநாதன் - முன்றில்  பதிப்பகம்




8 கருத்துகள்:

  1. நானும் இம்முறை சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் செல்ல நினைத்திருக்கிறேன். 18-ஆம் தேதி செல்வதாக உத்தேசம்.

    நீங்கள் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் பட்டியல் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் சார்.. முடிந்தால் இன்னும் ஒரு முறை வேட்டை ஆடுவேன்

      நீக்கு
  2. பலாமான அறுவடைதான் போலும்.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆயிரம் உணவு தானிய பதார்த்த மூலிகை குண விளக்கம் பற்றிய உங்கள் கருத்து

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...