செவ்வாய், 13 ஜூலை, 2010

பிரதி

பிரதியெடுப்பதுதான் நடக்கிறது
வாழ்க்கை முழுதும்...

வெயிலெடுத்து போட்டது
நிழலை நிஜத்தின் பிரதியாய்...
மேகமூட்டம் போல்
புகை எழும்பி பரவியது வெளியெங்கும்....
பெருக்கெடுக்கும் வியர்வை துளி போல்
கசிகிறது நீர்த்துளி கண்ணிலிருந்து

கண்ணாடி துண்டங்கள் போல்
ஜ்வலிக்கிறது கானல் நீர் வரி வரியாய்...
பிரதிடுப்பதுதான் நடக்கிறது
உலகமெங்கும்....

கடற்கரை மணலில் பதிந்து கிடந்தது
எவர் முகத்தின் பிரதியோ...
இழுத்து சென்ற ஆழிப் பேரலை மட்டுமே அறியும்
எங்கே தவிக்கிறதோ எவராலும் பிரதி எடுக்க முடியாத
உயிர்....

5 கருத்துகள்:

 1. நண்பரே,
  மிக அருமையாக எல்லா தளங்களிலும் செயல்பட்டு பிரமிக்க வைக்கிறீர்கள்,ஒரு ஃபாலோவர் விட்ஜெட்டும்,இமெயில் விட்ஜெட்டும் வைத்து விடுங்கள்,இவ்வளவு நல்ல கட்டுரைகள் கதைகள்,கவிதைகள் எல்லோரின் பாராட்டுதலுக்கும் தகுதியானது.

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பரே!
  என்னுடைய Blogger கணக்கில் சிறு தவறு உள்ளதால் Followers Widget வைக்க முடியவில்லை. இதற்கு மாற்று வழி - உங்கள் Dashboard 'ல் கிழே உள்ள Reading List என்னும் பெட்டியில் உள்ள ' Add ' என்கிற Option 'ல் க்ளிக் செய்யவும்.

  பிறகு Add From URL என்கிற இடத்தில் கீழ்கண்ட URL 'ஐ Copy, Paste செய்யவும்
  http://www.bharathikumar.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. http://www.google.com/friendconnect/?hl=en


  =============

  நண்பரே எனக்கும் இதுபோலவே முதலில் ஃபாலோவர் விட்ஜெட் வைக்காததால் ப்ளாகரின் ஆட்விட்ஜெட்டில் அனுமதி அளிக்கவில்லை
  பின்னர் நான் மேலே கொடுத்துள்ள சுட்டியில் லாக் இன் செய்து, அதில் இருக்கும் ஃபாலோவர் விட்ஜெட்டை தெரிவு செய்து,பின்னர் அது தந்த கோட் ஐ என் ஜாவாஸ்க்ரிப்ட் டூல்பாரில் பேஸ்ட் செய்தேன்.இதை முயன்றுபாருங்கள்,நான் உங்களை நீங்கள் சொன்னபடி ரீடிங் லிஸ்டில் தொடர்கிறேன்.நன்றி

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி நண்பரே!
  உங்கள் தகவல் எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. இப்பொழுது உங்கள் வழிகாட்டுதலின்படி என்னுடைய வலைப்பூவில் பின்பற்றுபவர்கள் என்கிற பகுதியை சேர்த்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...