கற்றுக்கொண்டால் போயிற்று
என்ன பிரமாதம்
என்று கைவிடப்பட்ட வித்தைகள் ஏராளம்
விடிந்தால் முடித்துவிடலாம்
என்று தள்ளிப்போடப்பட்ட
காரியங்கள் அநேகம்
பொருத்திய இடத்தில்
சுற்றியபடி
நகர்ந்தன கடிகாரத்தின் முட்கள்
சுழன்ற இடத்திலேயே
சூரியனையும் சுற்றி
பகலையும், இரவையும்
விடியவும், சாயவும் வைத்தது பூமி...
தூக்கத்தையும், கனவுகளையும்
தின்று கொழுத்து கழிந்தன பொழுதுகள்
எதேச்சையாக எதிரில் சந்தித்த
அதிமுக்கியமான நபரிடம் சொன்னேன்
'நேரமே கிடைப்பதில்லை' என்று..
அணுவைப் பிளந்தவனுக்கும்,
ஆளப்பிறந்தவனுக்கும்
எல்லா நிமிடங்களும்
எப்படி சரியாக வாய்க்கின்றன
என்று வியந்தபடி
காலியாயின தேநீர்க் கோப்பைகள்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெறியாட்டு
வெறியாட்டு (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...
-
ஒவ்வொரு தேசமும் தனக்கென்று அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒர் அருங்காட்சி அறையை அவரவர் வீட்டில் அவரவர் வச...
-
தமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்க்குமான அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுகிற இத் தருணத்தில் அவற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>