வெள்ளி, 3 மே, 2013

நான் சந்நியாசியுமில்லை; சம்சாரியுமில்லை; போராளி! (வ.உ.சி.வரலாறு)


                  காட்சி: 8

 பாத்திரங்கள் : ..சி, சிவம், தொழிலாளர்கள்

..சி.:   
வந்தே மாதரம்!
சிவம்:   
 வந்தே மாதரம்!!
குழு:
 வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
..சி.:
                எரிப்போம் எரிப்போம்... அந்நியப் பொருட்களை எரிப்போம்.
குழு:
 எரிப்போம் எரிப்போம்... அந்நியப் பொருட்களை எரிப்போம்

..சி.:
காப்போம் காப்போம்... சுதேசிப் பொருட்களைக் காப்போம்
 குழு:
 காப்போம் காப்போம்... சுதேசிப் பொருட்களைக் காப்போம்

..சி.:
                ஆயிரம் உண்டிங்கு ஜாதி... இதில் அந்நியர் வந்துபுகலென்ன நீதி?
குழு:
ஆயிரம் உண்டிங்கு ஜாதி... இதில் அந்நியர் வந்து புகலென்ன நீதி?
..சி.:
                எரிப்போம் எரிப்போம்... அந்நியப் பொருட்களை எரிப்போம்.
குழு:
எரிப்போம் எரிப்போம்... அந்நியப் பொருட்களை எரிப்போம்
..சி.:
காப்போம் காப்போம்... சுதேசிப் பொருட்களைக் காப்போம்
குழு:
காப்போம் காப்போம்... சுதேசிப் பொருட்களைக் காப்போம்
..சி.:
வந்தே மாதரம்!
சிவம்:
வந்தே மாதரம்!!
குழு:
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
சிவம்:
பிள்ளையவர்களே... கலெக்டர் விஞ்ச் துரையிடமிருந்து நமக்கு தாக்கீது வந்திருக்கிறது.
..சி.:
                என்னவாம்?
சிவம்:
                உடனே நெல்லை சென்று அவரை சந்திக்க வேண்டுமாம்.
..சி.:
                அதற்கென்ன? பார்த்தால் போயிற்று.
சிவம்:
ஒவ்வொரு முறை அவர்கள் அழைக்கும் போதும் ஒரு சந்தேகம் கூடவே எனக்கு வருகிறது.
..சி.:
மிஞ்சிப் போனால் சிறையில் அடைப்பார்கள் ... வேறென்ன செய்ய முடியும் அவர்களால்?!
சிவம்:
நம் போராட்டத்தை ஒடுக்கி விடுவார்கள். அவர்களது மிரட்டல்களுக்கு நாம் வேண்டுமானால் அஞ்சாமல் இருக்கலாம். ஆனால் அப்பாவி மக்கள் பயந்து விடுவார்களே...
..சி.:
அதற்காக... பார்க்காமல் போனால் இன்னும் அதிகம் தொல்லை தரத்தான் போகிறார்கள். இந்த சிறிய தொல்லைகளை சந்திக்க பயந்தால் பெரும் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.
சிவம்:
                இந்த முறை நானும் உங்களுடன் வருகிறேனே...
..சி.:
                ம்ம்ம்... அதற்கென்ன வாரும்.

                                                காட்சி: 9

 பாத்திரங்கள்
               வ..சி, சிவம், விஞ்ச்
..சி.:
                எதற்காக எங்களை அழைத்தீர்கள்?
விஞ்ச்:
மிஸ்டர் சிதம்பரம், நீங்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக அவதூறாக பேசியும் செயல்பட்டும் வருகிறீர்கள். உங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
..சி.:
                உங்கள் மீது அவதூறாக என்ன சொல்லப்பட்டது?
விஞ்ச்:
எங்கள் நாட்டுத் துணிகளை எரிப்பதும், பொருட்களை விற்பனை செய்ய விடாமல் தடை செய்வதும் இராஜ துரோகம்.
சிவம்:
நீங்கள் இந்த மாவட்டத்தின் கலெக்டர் என்று ஒருசிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வியாபாரிகளின் கலெக்டர் என்று புரிகிறது.
விஞ்ச்:
சந்நியாசி என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் தான் அடக்க வேண்டி வரும்.
சிவம்:
நான் சந்நியாசியுமில்லை; சம்சாரியுமில்லை; போராளி! இந்த நாட்டின் விடுதலைப் போராளி.

விஞ்ச்:
முடிவாகச் சொல்கிறேன். விபின் விடுதலைப் பெருவிழாவை நிறுத்த வேண்டும். எங்கள் நாட்டுப் பொருட்களை எரிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் நீங்கள் கைது செய்யப் படுவீர்கள்.
..சி.:
நீங்கள் உங்கள் நாட்டுப் பொருட்களை இங்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். எங்கள் நாட்டுப் பொருட்களை நீங்கள் உரிய விலை கொடுத்து வாங்க வேண்டும் செய்வீர்களா?
விஞ்ச்:
                ம்ஹும்... நீங்கள் இருவரும் அடங்க  மாட்டீர்கள். போலீஸ்... அரெஸ்ட் தெம்.
..சி.: 
வந்தே மாதரம்!

சிவம்:
வந்தே மாதரம்!

..சி.: 
வந்தே மாதரம்!

சிவம்:
வந்தே மாதரம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

 எனது நூல்கள்                                                                       (மின்னூல்)