வெள்ளி, 3 மே, 2013

நீங்க முதலாளியா... தொழிலாளியா? (வ.உ.சி.வரலாறு)


காட்சி - 4
பாத்திரங்கள் : ..சி, சிவம், கூட்டம்
..சி.:
தொழிலாள அன்பர்களே... கால் வயிற்றுக் கஞ்சிக்கும் பொறாத    கூலி, உடல்நலக் குறைவென்றாலும் இறங்காத அதிகார      ஆணவம், நியாயமான விடுப்புகளைக் கூட தர மறுக்கும் திமிர்... இதுதான் கோரல் மில்லின் நிர்வாகம். வெள்ளையர்களின் கையிலிருக்கும் துருப்புச் சீட்டுக்கள் இரண்டுதான். ஒன்று,                 வாணிபம். மற்றொன்று... தொழிற்சாலைகள். இரண்டிலும் நாம் என்றைக்கு ஆதிக்கம் செலுத்துகிறோமோ அன்றுதான் நாட்டுக்கும் விடுதலை; நமக்கும் விடுதலை. யாருக்காக                 வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால், எவரிடமும்அடிமையாக இருக்கக் கூடாது. அன்னியர் ஆதிக்கத்தை அடியோடு அழிப்போம். ஆங்கில ஆதிக்கத்தை வேரறுப்போம்.      வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
கூட்டம்:
                வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
சிவம்:
பிள்ளையவர்களே... தொழிலாளர்கள் போராட்டம் உயிர்கொண்டு எழுச்சியுடன் தொ                கலெக்டர் ஆஷ் துரையிடம் முறையிட்டிருக்கிறார்கள் போலும்.   ஆஷ் துரை உங்களை சந்திக்க வேண்டுமாம். எனக்கென்னவோ   அவன்சூழ்ச்சியால் உங்களைக் கைது செய்து விடுவானோ என்று தோன்றுகிறது. ஏற்கனவே சுதேசிக் கப்பல்  கம்பெனி       ஆரம்பித்ததில் அவனுக்கு நம் மீது வன்மம் அதிகம். நீங்கள் அவனைச் சந்திக்கச் செல்வது அத்தனை உசிதமல்ல.
..சி.:
கைது செய்தால் அதனை எதிர்கொள்வோம். இப்போது நாம்              தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதி. நாம் சந்திக்க மறுத்தால்                                அது தொழிலாளர்களுக்கு எதிராக முடிந்து விடும். எனவே சப்-               கலெக்டரை சந்தித்துவிட்டு வருகிறேன்.
சிவம்:
                அப்படியானால், நானும் உங்களுடன் வருகிறேனே...
..சி.:
வேண்டாம். நீங்கள் போராட்டக் களத்தில் இருங்கள். நீங்கள்                           உடனிருப்பது அவர்களுக்கு உத்வேகத்தை தரும். நான்                                  வழக்கறிஞர் நண்பர் மகாதேவனை அழைத்துச் செல்கிறேன்.                   ம்ம்ம்... நமது போராட்டக் களத்தில் இருக்கும் தொழிலாளர்கள்,                     குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்கள்?
சிவம்:
பலருக்கும் சிரமம்தான். ஏற்கனவே அவர்கள் பெற்ற ஊதியம் குறைவு தானே. அவர்கள் இதுநாள் சேமிப்பு வியாதியும்  கடனும் தான்.
..சி.:
தொழிலாளர்களின் குடும்ப நல நிதி ஒன்று துவங்கி நமக்குத் தெரிந்த தனவந்தர்களிடம் வசூலித்து அவர்களது சிரம   நிலையைப் போக்க வேண்டும்.
சிவம்:
                நிச்சயமாக.
..சி.:
                அதற்கு நீங்கள் ஆவன செய்யுங்கள். வருகிறேன்.

                                                காட்சி -5
பாத்திரங்கள் :
                        ..சி, ஆஷ்
ஆஷ்:
மிஸ்டர் சிதம்பரம்... பிரிட்டீஷ் நேவிகேஷன் கம்பெனிக்கு  ஆப்போசிட்டா நீங்க ஒரு ஷிப்பிங் கம்பெனி              ஆரம்பிச்சிருக்கீங்க. உங்களுக்கு முதலாளியா ஆகனும்னு ஆசை வந்துடுச்சுன்னு நெனைச்சேன். இப்ப என்னடான்னா,                             ஹார்வியோட மில்லுல லேபர்ஸ் கூட சேர்ந்துகிட்டு டார்ச்சர் கொடுக்கறீங்க. நீங்க முதலாளியா... தொழிலாளியா?
..சி.:
                நான் உழைப்பாளி. இந்த தேசத்துக்கும் சமூகத்துக்கும்!
ஆஷ்:
நான்சென்ஸ்... உங்கள் நோக்கம் எப்பவும் பிரிட்டிஷ்க்கு எதிராகத்தானிருக்கு. இது ராஜ துரோகம்.
..சி.:
நாங்கள் உங்களை ராஜாவாக முடிசூட்டவுமில்லை; ஏற்கவுமில்லை. ஆகவே உங்களை எதிர்ப்பது ராஜதுரோகமாகாது.

ஆஷ்:
நீங்கள் யார் எங்களைத் தேர்ந்தெடுக்க? உங்களுக்கு வாக்குரிமையுமில்லை; சட்டப்படி எதையும் கேட்கும் உரிமையும் இல்லை. ஆஃப்ட்ரால் யு ஆர் ஆல் இண்டியன்ஸ்... பிளாக் மென்ஸ்... நாங்கள் எல்லாம் சூரியன் அஸ்தமிக்காத தேசத்தில் பிறந்தவர்கள்.

..சி.:
உங்களை நம்பி சூரியன் கூட உறங்க மறுக்கிறது போலும். நாங்கள் கறுப்பர்கள் தான், சுடரின் நுனி கூட கறுப்பு தான். ஆனால் சுயமாக ஒளி வீசும். தேவைப்பட்டால் சுட்டெரிக்கும். வி ஆர் ஃபயர்! பட், யு ஆர் ஆஷ்! எரிந்து முடிந்த எச்சம். அதனால் தான் வெள்ளையாக இருக்கிறீர்கள்... மைண்ட் இட்!

ஆஷ்:
மிஸ்டர் சிதம்பரம், நீங்கள் அளவுக்கு மீறிப் பேசுகிறீர்கள். ஆலைத் தொழிலாளர்களைத் தூண்டி விடுவதாக உங்கள் மீது குற்றம் சுமத்தி, உங்களை சிறை வைக்க முடியும். தெருவுக்குத் தெரு வந்தே மாதரம், வந்தே மாதரமென்று கூச்சலிடுகிறீர்களாமே... உங்களைக்கூட வந்தே மாதரம் பிள்ளை என்று தான் அழைக்கிறார்களாமே... அதுவே பெரிய குற்றம்.

..சி.:
நான் இங்கு வந்து ஒரு முறை கூட சொல்லவில்லை வந்தே மாதரமென. நீங்கள் மூன்று முறை சொல்லி விட்டீர்கள். அப்படிப் பார்த்தால் நீங்களும் குற்றவாளிதானோ?!

ஆஷ்:
மிஸ்டர் சிதம்பரம், ஒரு கலெக்டரிடம் பேசுகிறோமென்பது நினைவில் இருக்கட்டும்!
..சி.:
                நீங்கள் சப் -கலெக்டர் என்று தெரிந்து தான் பேசுகிறேன்.

ஆஷ்:
ஆலைத் தொழிலாளர் போராட்டத்தில் நீங்கள் விலகிக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். உண்மையில் நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன். நீங்கள், சுதேசி கப்பல் கம்பெனி நிர்வாகத்திலிருந்து விலகி விட்டால், உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பிரிட்டிஷ் கம்பெனியிடமிருந்து நான் பெற்றுத் தருகிறேன்.
..சி.:
நான் சம்பாதிக்க வரவில்லை. பிரிட்டிஷ் கம்பெனிக்கு சமாதி கட்ட வந்தேன். விளைவுகளைச் சந்திக்க துணிச்சல் இல்லாதவன் போராட்ட களத்துக்கே வரமாட்டான். இதற்காகத் தான் அழைத்தீர்களா? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கிளம்புகிறேன்.

ஆஷ்:                (தனக்குள்)
                என்ன திமிர்! சிதம்பரம், உங்கள் கப்பல் கம்பெனியை ஒழித்துக் கட்டுகிறேன்.

(முடியுமா...?!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...