வெள்ளி, 3 மே, 2013

‘காலியா' கப்பலும் ‘லாவோ' கப்பலும் (வ.உ.சி. நாடகம்..).


                          காட்சி - 3

பாத்திரங்கள் :
                ..சி, சிவம், மீனாட்சி

..சி. :
                வாருங்கள் சிவம். எப்படியிருக்கிறீர்கள்?

சிவம்:
                மிக்க நலம்தான். எப்பொழுது பம்பாயிலிருந்து வந்தீர்கள்?

..சி. :
       வந்து இரண்டு நாட்களாயிற்று. ‘காலியா' என்ற கப்பலோடுதான் நானும் வந்தேன்ஃப்ரான்ஸிலிருந்துலாவோ' என்ற கப்பல் வந்து கொண்டிருக்கிறது.
சிவம்:
        மகாகவி பாரதியார், நாம் கப்பல் வாங்கி வந்த செய்தியறிந்து                          பெருமிதத்துடன் நமக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார். “நீண்ட                     நெடுங்காலமாக புத்திரப் பேறு இல்லாத அருந்தவம் செய்த                               பெண்ணொருத்தி, ஏக காலத்தில் இரண்டு புத்திரர்கள் பெற்றால்                   எவ்வளவு அளவிலா ஆனந்தத்தை அடைவாளோ, அதுபோன்ற                    ஆனந்தத்தை பாரதத் தாய் பெற்று விட்டாள். நண்பர் ஸ்ரீமான்                             ..சி.யும் அவரது நண்பர்களும் பிறந்த நாட்டுக்கு வீரம் மிக்க                      கடமையை தீரமுடன் செய்து விட்டார்கள்என்பதுதான்                                         அச்செய்தி.

..சி. :
                மகாகவி வாக்கு மகேசன் வாக்கு அல்லவா!
சிவம்:
       அதோ செல்கிறானே... பார்வையற்ற சிறுவன்... அது இராமிய  தேசிகன் தானே...
..சி. :
                ஆமாம். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவனை ஏன் தத்தெடுத்து               வளர்க்கிறீர்கள்? அவனுக்கு ஏன்  உணவளிக்கிறீர்கள்?  என்று  எத்தனை இடையூறுகள் எனக்கு!
சிவம்:
                தங்கள் இல்லத்தரசிக்கும் இதனால் சங்கடங்களோ...?

..சி. :
                அவள் என் முதல் தாரம் வள்ளியம்மையின் சகோதரியல்லவா!                   அவள் என்ன சொல்கிறாளென்று நீங்களே கேளுங்களேன்... மீனாட்சி... மீனாட்சி...

மீனாட்சி:
       அண்ணன் வந்திருக்கிறாரென்று அடுக்களையில் பதார்த்தங்கள்                செய்து கொண்டிருந்தேன். வாருங்கள் அண்ணா... சாப்பிடலாம்.

சிவம்:
        உங்கள் வீட்டுக்கு வந்து யாரை சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு                             அனுப்பியிருக்கிறீர்கள்?! தாழ்ந்த குலத்துக்காரனான                                                இராமியாவுக்கு உணவளிப்பதில் உங்களுக்கு சங்கடங்கள்               ஏதும்....?
மீனாட்சி:
         மனிதரில் ஏது உயர்ந்த குலம் தாழ்ந்த குலம்? வெள்ளையர்கள் நம்மைத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறார்கள். நாம் நமக்குள்ளே உயர்வு தாழ்வு நினைக்கலாமா?
சிவம்:
       கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென சும்மாவா சொன்னார்கள்...! சுற்றியிருப்பவர்கள் ஏதேனும் சொல்லி     உங்கள் மனத்தை காயப்படுத்தி  விடுகிறார்களோ  என்றுதான் கேட்டேன்.
மீனாட்சி:
         யார் என்ன சொன்னாலும் சரி. மனிதர்களில் உயர்வு தாழ்வு               பார்ப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. பசித்த வயிறுக்கு       புசிக்கத் தருவது குலத்துரோகம் என்றால் அந்த துரோகத்தை காலம் முழுவதும் செய்து கொண்டே இருப்பேன்.
சிவம்:
                நெஞ்சம் நெகிழ்ந்ததம்மா... ஏதோ பிள்ளைவாள் அதிகாரத்துக்கு                  பயந்துதான் நீங்கள் உணவளிக்கிறீர்களோ என்று சிறு ஐயம் இருந்தது.
மீனாட்சி:
          பிறருக்கு நன்மை தரும் செயல்களில் பயமென்பது இருக்கக் கூடாது என்கிற பாடத்தை கற்றுத் தந்தவரே அவர்தானே.                  நீங்கள் மதிய உணவு சாப்பிட்டுத் தான் செல்ல வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் சிறிது பாக்கி உள்ளது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்.
சிவம்:
                அப்படியே ஆகட்டும். பிள்ளைவாள், ஏதோ அவசரமாகப்                                        பேசவேண்டுமென சொல்லி அனுப்பினீர்களே...
..சி. :
        ஆம். நமது திருமந்திர நகராம் தூத்துக்குடியில் வெள்ளையன் ஹார்வி நடத்தி வரும் கோரல் மில்லில் பல கொடுமைகள் தொழிலாளர்களுக்கு எதிராக நடப்பதாகக் கேள்விப்பட்டேன்.
சிவம்:
         ஆம். எனக்கும் செய்திகள் கிடைத்தன. தொழிலாளர்களுக்கு ஊதியம் மிக மிகக் குறைவு. அத்துடன் உடல்நலக் குறைவுக்காக வழங்கப்படும் நியாயமான விடுப்புகள் கூடக்  கிடையாதாம்.
..சி. :
                எதிர்த்துக் கேட்பவர்களுக்கு கசையடிகள் கூடத்                                                             தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். என்ன கொடுமை! நம்மிடம்                     உழைப்பையும் சுரண்டி உயிரையும் உறிஞ்சுகிறானே...!

சிவம்:
        என்ன செய்வது? அவன் முதலாளி வர்க்கம். அவனை எதிர்த்து  எப்படிப் போராடுவது என்றுதான் புரியவில்லை.
..சி. :
இதிலென்ன யோசிக்க இருக்கிறது? தொழிற்சங்க அமைப்பை நிறுவி உடனே வேலை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
சிவம்:
                கிட்டத்தட்ட 1600 தொழிலாளர்கள் அந்த ஆலையில் வேலை                              பார்க்கிறார்கள். எல்லோரையும் வேலையை விட்டு நிறுத்தி                             விட்டாலோ, ஊதியத்தைப் பிடித்து விட்டாலோ அவர்கள் என்ன                       செய்வார்கள் ... பாவம்!
..சி.:
         அத்தனை பேரும் வெறும் வயிறு மட்டும் படைத்தவர்களாக                              நிர்வாகம் கருதுகிறது. நான் அவர்களுடைய மூளை பலத்தைக்                                கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.
சிவம்:
                அப்படியென்றால்?
..சி.:
        அனைவரும் ஒற்றுமையாக வேலைக்குச் செல்லாமல் வெளியே                 நின்றுவிட்டால், வேறு யாரைக் கொண்டு குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து விட முடியும்?
சிவம்:
                வயிறு பலசமயம் ஜெயித்து விடுகிறதே...
..சி.:
                மனோபலம் எல்லாவற்றையும் சாதித்து விடும். நாம் வேலையை                             நிறுத்துவோம். அவர்கள் ஆலையை நிறுத்தட்டும். பிறகு என்ன                    நடக்குமென்பதை நாம் தீர்மானிப்போம்.

சிவம்:
                நல்லது பிள்ளையவர்களே. கோரல் மில்லின் ஆலைத்                                           தொழிலாளர்கள் போராட்டம் தான் நமது அடுத்த இலக்கு.

(இலக்கை நோக்கி முன்னேறுவோம்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...