பூமிப் பக்கங்களில் ஒவ்வொரு முறை எழுதும்போதும்
ஒவ்வொரு பொருளைத் தரும்
மழைவரிக் கவிதைகளை வாசியுங்கள்
உங்களுக்கு அருளப்பட்ட
வாழ்வின் அர்த்தம் புரிபடலாம்.
அடர்ந்த தூக்கத்தில்ஆழ்ந்து
அதிகாலைப் பனியை
தவறவிட்டவர்களுக்காக
முதிர்பனியாய் தன்னை
நகலெடுத்துக் கொண்டிருக்கிறது மழை!
நீங்கள் வீடு திரும்பும்போது
இலை வழியே பன்னீரைத் தூவியபடி
ஒரு வரவேற்பாளனைப் போல்
பூ இதழ்களில்அலங்கார விளக்குகளேற்றிக்
காத்திருக்கிறது மழை!
அழைத்துச் செல்ல எவருமில்லாமல்
படுக்கையில் கிடக்கும்
முதிர்பருவத்தினருக்கு
ஜன்னல் வழியே
சாரல் வார்த்தைகளால்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது மழை!
எல்லா வெப்பத்தாலும்
சூடேறிப்போயிருக்கும் உங்களை
பாதம் வழியே தணிக்க
வாசலருகே ஆங்காங்கே கிடக்கின்றன
மழைத் திட்டுகள்.
உப்புக் கலக்காத மழைக்கண்ணீரை
நாவிலேந்துங்கள்
வானிலிருந்து இடறி விழுந்த
மழைக் குழந்தைகளை
முடிந்தால் மடியிலேந்துங்கள்...!
உங்கள் தோட்டத்து ரோஜாவை
வெயில் விரல்கள் பறித்துவிடாமல்
சுற்றி நடும் மழைக் கம்பிகளை
நன்றியுடன் ரசியுங்கள்!
பள்ளிவிட்டு தனியே வரும்போதெல்லாம்
தோளோடு அணைத்தபடி
உடன்வரும் மழைத் தோழனை
வீட்டின் வாசல் வந்ததும்
அப்படியே விட்டுவிட்டு வந்துவிடாதீர்கள்...
நட்பிற்கு இலக்கணமல்ல அது...
ஊன்றத் துடித்து தோற்று
தரையில் பரவும் மழையின் பாதங்களை
மிதித்து விடாதீர்கள்...
அதன் போக்கில் நகர விடுங்கள்.
மழைப் பரிவாரங்களின்ஆரவாரமான ஆர்ப்பரிப்பு
சிலசமயம் வலிப்பது போல் தோன்றும்...
வசை பாடாதீர்கள்...
அது பூமி விழிப்பிற்கான
எழுப்புதலாய் இருக்கலாம்...
ஒரு தாயின் அதிகாலை உசுப்புதலைப் போல.
பூமி விரிப்பில் மழைத் தூரிகைகள்
வரைந்து முடித்த ஓவியங்களில்
ஒரு சோம்பேறிச் சூரியன்
தாமதமாய் வர்ணம் கலக்க முயற்சிப்பதுபோல்
வாளாவிருந்து விட்டுப்பின் வருந்தாதீர்கள்.
மிகச்சரியாக மழையின் எந்தச் சொட்டு
உங்களைசிலிர்க்கச் செய்திருக்குமென்று
இனம் பிரித்துவிட முடியாது...
எல்லாச் சொட்டுக்களையும்
நிதானமாகச் சேகரியுங்கள்.
ஏனென்றால்-மழலைப் பருவமும்
மழைச் சொட்டுக்களும்
இழந்தால் கிடைப்பதில்லை!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார் அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...
-
மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனி...
-
காட்சி : 13 பாத்திரங்கள் : வ . உ . சி , , வடுகராமன் , ஜெயிலர் வடுகராமன் : ஐயா கப்பலோட்டிய தமிழரே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>