செவ்வாய், 13 ஜூலை, 2010

வரம்

கண்டதைக் கிழிக்கலாம்...
கண்டபடி திட்டலாம்...
காறி உமிழலாம்..

சூழலின் ஐளனத்தை உதறி
குமுறிக் குமுறி ஆழலாம்

மணல்வெளியில் மணிக்கணக்காய் புரளலாம்...
உடைகளற்றுத் திரியலாம்...

கூத்தாடி கூத்தாடி கையில் பட்டதை
போட்டுடைக்கலாம்...

கால் தடுக்கிய கல்லை
நையப் புடைக்கலாம்..

தோன்றும் போதெல்லாம் உரக்க சிரிக்கலாம்

சூரியனுக்கு நேராய் திமிராய் உறங்கலாம்...
நிலவொளியில் குபீரென
குளத்தில் குதிக்கலாம்...

துயரங்களின் துரத்தல்களிலிருந்து
தப்பித்து திரியலாம்
பைத்தியமாகும் வரம் மட்டும்
கடவுளிடம் கிடைத்துவிட்டால்...

0 comments:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>