செவ்வாய், 13 ஜூலை, 2010

கவிஞனாயிருத்தல்

வறண்டு பிளந்த நிலத்தினுள்
வதங்கித் தளர்ந்திருக்கும் வேர்தேடி
நனைத்து உயிர்ப்பிக்கும்
ஓர் மழைத்திவலை போல
இருக்க நினைத்ததுண்டு...

குளிர்ந்த கிரணங்களால் இரவை நிரப்பி
பாலாய்ச் சிரிக்க
ஒரு நிலவைப்போல்
இருக்க நினைப்பதுண்டு...

தூங்கும் மொட்டிதழை வருடியவிழ்த்து
கொஞ்சம் வாசம் உறிஞ்சி
செல்லும் திசைதோறும்
விதைத்துப்போகும்
காற்றாய்த் திரிய நினைத்ததுண்டு...

அலையாய் அலைந்து மணலை அள்ளி
உள்ளிழுத்து கர்வம் ததும்பக் கொந்தளிக்கும்
கடலாய் இருக்க நினைத்ததுண்டு...

உயிரில் இழைத்து உதிரம் நிறைத்து
பிரபஞ்ச தரிசனம் தந்த தாயாய்ப்
பிரதிபலிக்க வார்த்தைகளால் வாழ்க்கையில்
முடிந்ததில்லை
எதுவும் சாத்தியப்படாதபோது
எல்லாவற்றுக்கும் மாற்றாய் ஒன்றுண்டு.

அது‘ஒரு கவிஞனாயிருத்தல்'

2 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...