வெள்ளி, 3 மே, 2013

நெருஞ்சி முள்ளில் எந்த முள் நல்ல முள்? (வ.உ.சி. நாடகம்...)



காட்சி: 11
              
  பாத்திரங்கள் :    நீதிபதி பின்ஹேய்,

கூட்டத்தில் ஒருவர் :
                இன்று தானே சிதம்பரம் பிள்ளை மீதான வழக்கிற்குத் தீர்ப்பு?
மற்றொருவர்:
                ஆமாம். நீதிபதி வாலேஸை மாற்றி விட்டு நீதிபதி பின்ஹேயை இந்த                     வழக்கில் நியமித்திருக்கிறார்களாம். அவர் என்ன தீர்ப்பு சொல்கிறார்                     என்றுதான் பார்ப்போமே...
ஒருவர்:
நெருஞ்சி முள்ளில் எந்த முள் நல்ல முள்? இவர் மட்டும் விதிவிலக்கா என்ன?
டவாலி:
சைலன்ஸ்... சைலன்ஸ்... நீதிபதி வருகிறார், நீதிபதி வருகிறார்.
நீதிபதி பின்ஹேய்:
இந்த வழக்கின் முழுமையான விசாரணை முடிந்த பிறகு தீர்ப்பினை வாசிக்கிறேன். திரு. சிதம்பரம் பிள்ளை சுதேசி தொழில்வளர்ச்சிக்கு பாடுபடுவதாக நடித்துக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே இனப் பகைமையைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. சிதம்பரம் பிள்ளை மிகப்பெரிய இராஜ துரோகி. அவரது எலும்புக் கூடு கூட இராஜ விசுவாசத்துக்கு விரோதமானது. திருநெல்வேலி குழப்பத்திற்கும் கலவரத்திற்கும் சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவுமே முழுக் காரணம்.
இந்தியாவில் அரசியல் பேச இந்தியர்களுக்கு அவசியமேயில்லை. ஏனெனில், பிரிட்டிஷ் காரர்களுக்கு இருப்பது போல இந்தியர்களுக்கு வாக்குரிமையில்லை. அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றினால் அதை மாற்றவோ திருத்தவோ இந்தியர்களை சட்டம் அனுமதிக்கவில்லை. இந்தியர்கள் தனியாகக் கூடிப் பேசி அரசாங்கத்துக்கு மகஜர் அனுப்பலாம். ஆனால் அந்த மகஜர்களையும் அரசாங்கம் கவனித்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் ஏதுமில்லை.
அப்படியிருக்க திருநெல்வேலியிலும் தூத்துக் குடியிலும் வாக்குரிமை பெறாத மக்களை ஒருவர் கூட்டி வைத்துப் பேசுவது பைத்தியக்காரத்தனம். ஏனென்றால், இவர் சொல்வதைக் கேட்டு நிறைவேற்ற அவர்களுக்கு சக்தியில்லை. சட்ட ரீதியான உரிமையுமில்லை. அந்நியப் பொருட்களை விலக்குமாறு பேசுவதை இன்று அனுமதித்தால் அந்நிய நாட்டாரையும் பகிஷ்கரிக்கவும் அழிக்கவும் அவர்கள் தயாராகி விடுவார்களே... ஆகவே இது ஆபத்தான பேச்சாகும். எனவே, ..சிதம்பரனாரின் சாதாரண மேடைப் பேச்சுக்கு இருபது ஆண்டுகள் தீவாந்திர தண்டனையும் சுப்பிரமணிய சிவாவை தூண்டிவிட்டு இயக்கியமைக்காக, இருபது ஆண்டுகள் தண்டனையும் ஆக மொத்தம், நாற்பது ஆண்டுகள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும் உடன் துணை போன சுப்பிரமணிய சிவாவுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடுகிறேன்.

..சி., சிவா...
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!

               காட்சி: 12

பாத்திரங்கள் : ..சிசிவம்
              
          (சிறையில் ..சி. கல் உடைக்கும் சப்தம் கேட்கிறது.)
சிவம்:
என்ன கொடுமை... என்ன கொடுமை! கப்பலோட்டிய தமிழர் இங்கு கல் உடைத்து கஷ்டப்படுவதா? உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்த பாளையங்கோட்டைச் சிறைச்சாலையில் இன்று பாவக்கறை படிந்து விட்டது. இந்தப் பரங்கியர்களின் புத்தி ஏன் இத்தனைக் கீழ்த்தரமாகப் போகிறது?
..சி:
போகட்டும். என்னுடைய தேசத்தின் பாறைகளை உடைத்து தானே கற்களாக்குகிறேன். அவை ஏதேனும் ஒரு சாலையில் நல்லவர்களுக்குப் பாதையாகட்டும்.


சிவம்:
கைகளில் உள்ள தோல் உரிந்து கன்றிப் போய் விட்டனவே. உங்களுடைய உடையைப் பார்த்தால் எனக்கு அழுகையே வந்து விடும் போலிருக்கிறது. கோணிப்பையைக் கிழித்துப் போட்டது போல் எத்தனைக் கொடூரம்?! ஆங்கிலேயரின் வக்கிரப் புத்திக்கு அளவேயில்லையா...?

..சி:
உடையைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். வேண்டுமென்றே மண்ணைக் கலந்து காய்ச்சித் தரும் கால் குவளைக் கஞ்சியை எப்படித்தான் குடிப்பதோ... பாவம், சிறையில் நம்மோடு இருக்கும் நம் நண்பர்களும். அப்படியே விட்டெறிந்து விட்டு வெறும் வயிற்றை தண்ணீரால் நிரப்பிக் கொண்டேன். பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க என்னால் இதையும் தாண்டிய கொடுமைகளை தாங்கி கற்களையல்ல... இரும்பைக் கூட உடைத்து விடுவேன்.
சிவம்:              
உடைக்க முடியாதது இரும்பை விட இறுகிப் போய் விட்ட வெள்ளையர்களின் இரக்கமில்லாத இதயம்தான். அதுசரி, சணல் கயிறு திரிக்கும் வேலையைத் தானே உங்களுக்கு அளித்திருந்தார்கள்... திடீரென ஏன் மாற்றினார்கள்?
..சி:
அங்கிருந்த ஒரு கைதி என் கைகளில் கொப்பளங்கள் போட்டிருந்ததைப் பார்த்து, பரிதாபப் பட்டு விட்டான். ஆங்கிலேய எடுபிடி ஜெயிலருக்கு கோபம் வந்து விட்டது. அதைவிடக் கடுமையான இந்த இடத்துக்கு என்னை மாற்றி விட்டான்.
சிவம்:
மிருகங்கள் கூட வாழ்வதற்கென்று ஒரு நியதியோடு வாழ்கின்றன. ஆனால் இந்த மனிதர்களின் ஆணவப் போக்கு எல்லையில்லாத் திமிருடன் அலைந்து கொண்டிருக்கிறது. உங்கள் மீதான அபாண்டமான தண்டனையை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். ஆனால் வங்கத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் உங்கள் மீதான தீர்ப்பை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கின்றன. ஸ்டேட்ஸ் மேன், சுயராஜ்யம், இந்தியா, சுதேசமித்திரன், இங்கிலீஷ் மேன், ஸ்டாண்டர்ட் ஆகிய பத்திரிகைகளில் வெள்ளை அரசாங்கத்தை கடுமையாகத் தாக்கி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதில் இந்தியா, சுயராஜ்யம் இரண்டும் மூடுமளவு கடுமையான நெருக்கடிகளை பிரிட்டிஷார் செய்து வருகின்றனர்.
ஜெயிலர்:
சிதம்பரம் பிள்ளை, உங்களை கோவைச் சிறைக்கு மாற்றி உடனே அழைத்துச் செல்ல உத்தரவு. நீங்கள் அங்கு கிளம்ப ஆயத்தமாயிருங்கள். சிவம், உங்களை திருச்சி சிறைக்கு மாற்றியுள்ளோம்.
சிவம்:
                ஏன் இந்த திடீர் மாற்றம்?
..சி.
வேறென்ன? நாம் இருவரும் ஒன்றாய் இருப்பது வெள்ளையரின் கண்களை  உறுத்தியுள்ளது போலும். நூலுக்குப் பேர் போன கோவையில் நாமும் ஒரு நல்லதொரு நூல் செய்ய அரிய வாய்ப்பு. மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...