வெள்ளி, 3 மே, 2013

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க (வ.உ.சி. நாடகம்)


காட்சி: 10

பாத்திரங்கள்:
            ..சிமகாகவிபாரதிநீதிபதி,          வழக்குரைஞர்                                                                
நீதிபதி:
மிஸ்டர் சிதம்பரம், நீங்கள் அரசுக்கு எதிராகச் சதி செய்திருக்கிறீர்கள். அதனால் உங்கள் மீது இராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
..சி.:
இன்னும் விசாரணையே முடியவில்லை. ஆனால் நீங்கள் தீர்ப்பு எழுதி விட்டீர்கள் போலிருக்கிறதே...
நீதிபதி:
உங்கள் தரப்பில் சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள்? உங்கள் வழக்கில் அப்படி எவரையாவது குறிப்பிட்டிருக்கிறீர்களா?
..சி.:
முறையாக நாங்கள் மனுச்செய்துள்ளோம். எங்கள் சார்பாக மகாகவி பாரதியார் வருகிறார்.
நீதிபதி:
                சாட்சியைக் கூப்பிடலாம்.
டவாலி:
                சுப்பிரமணிய பாரதி... சுப்பிரமணிய பாரதி... சுப்பிரமணிய பாரதி.
வழக்கறிஞர்:
                நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன?

பாரதி:
                பிரம்மமே  யானென பேசினர் பெரியோர் ..நான் கவிஞன் சுப்பிரமணிய பாரதி.
வழக்கறிஞர்:
                என்ன தொழில் செய்கிறீர்கள்?
பாரதி:
                எமக்குத் தொழில் கவிதை.
வழக்கறிஞர்:
                அதுசரி. ஜீவனத்துக்கு?
பாரதி:
                நான் சாப்பிடுவதும் கவிதையைத்தான். நான் வாசிப்பதும் கவிதையைத்தான்!                            நான் சுவாசிப்பதும் கவிதையைத்தான்!
வழக்கறிஞர்:
                இதோ நிற்கிறாரே... ..சி... இவரை அறிவீர்களா?
பாரதி:
                இவரைத் தெரியாதவர் இந்தத் தரணியில் எவர்? பரங்கியரின் பிடறியைப்                         பிடித்து உலுக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையமைச்சர் தயாபர                 பிள்ளையின் வழிவந்த இளஞ்சிங்கம் அல்லவா இவர்?! பாரதத்துக்கே வீரம்                   கற்றுத் தந்த பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகே ஒளிவீசும் ஒட்டப்பிடாரம்                                 சிதம்பரம் பிள்ளை அல்லவா இவர்….. நன்றாகத் தெரியும்
வழக்கறிஞர்:
                ஓஹோ...! அப்படியானால் இவர் பரம்பரைக் குற்றவாளியா?!
பாரதி:
                நாவை அடக்கு! நீர் நீதிபதியல்ல; தீர்ப்பெழுத. நீதிபதி , இவர் உங்கள்                      அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார்.
நீதிபதி:
                மிஸ்டர் லாயர், தீர்ப்பு எழுதுவதற்குள்  நீர் வாசிக்காதீர். ம்ம்... மேலே...

வழக்கறிஞர்:
                மன்னிக்கவும் மை லார்ட். (பாரதியை நோக்கி) இவர் அந்நியத் துணிகளை                        பகிஷ்கரிப்போம் என்ற பெயரில் அவற்றை எரித்தாரே நீர் அறிவீரா?
பாரதி:
                நன்றாக அறிவோம். இவர் ஆலையில் நுழைந்து உற்பத்தி ஆகின்ற                           துணியையா எரித்தார்? இவரும் இவரது தோழர்களும் தமது சொந்த                       பணத்தில் வாங்கிய துணிகளைத் தானே எரித்தார்கள்...! இதில் அரசு                       தலையிட என்ன இருக்கிறது?!
வழக்கறிஞர்:
                உமது பேச்சுத் திறமை எந்த குற்றத்தையும் சரியென நிரூபித்து விடும்                    போலிருக்கிறதே...! விபின் பாலர் விடுதலைப் திருநாள் என்ற பெயரில் விழா                               எடுத்து அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுகிறாரே...
பாரதி:
                விபின் பாலர் சிறைக்கம்பிகளை உடைத்து விட்டு யாருக்கும் தெரியாமல்                         வெளியே வந்து விட்டாரா?
வழக்கறிஞர்:
                இல்லை... நீதிமன்ற தீர்ப்புப் படிதான் விடுதலையாகி வந்தார்.
பாரதி:
                ஆக உங்கள் நீதிமன்ற நடவடிக்கை படி உங்கள் சட்டத்தின் படி உங்கள்                                 நீதிபதி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அதைக்                                              கொண்டாடுவது குற்றமென்றால் உங்கள் நீதிபதியின் தீர்ப்பும் குற்றமோ?                         நியாயப்படி பார்த்தால் நீங்கள் தான் உங்கள் சட்டத்தை இழிவு                                       செய்திருக்கிறீர்கள். நீங்கள் தான் நிஜமான இராஜ துரோகக் குற்றவாளி.                                                                              (கோர்ட்டில் சிரிப்பலை)
நீதிபதி:
                சைலன்ஸ்... சைலன்ஸ்.

வழக்கறிஞர்:
                குழப்பத்தைத் தூண்டும் உங்கள் பேச்சு கேட்பதற்கு சிரிப்பாக                                            இருக்கலாம். ஆனால், தண்டனைக்குரிய குற்றத்திலிருந்து சிதம்பரத்தைக்                     காப்பாற்ற ஒருபோதும் உதவாது.
பாரதி:
நீர் விடுவித்தாலும் விடுவிக்காவிட்டாலும் அவரது சுதந்திர வேட்கை ஒருபோதும் தணியாது.
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டு
                போகவோ-நாங்க்ள்- சாகவோ
அழுது கொண்டிருப்போமோ ஆண்பிள்ளைகள்
                அல்லமோ- உயிர்- வெல்லமோ
இது விஞ்ச் சுக்கு எங்கள் சிதம்பரனார் சொல்வது போல் நான் எழுதிய பாடல் இதுதான் நான் உமக்கு சிதம்பரனார் பற்றிக் கூறும் எச்சரிக்கையும் கூட
நீதிபதி:
                திங்க்... ஹி இஸ் மோர் டேஞ்சரஸ் தென் வி.வொ.சி. செண்ட் ஹிம் அவுட்.
வழக்கறிஞர்:
                ஐயா பாரதியாரே, போதும் உங்கள் சாட்சியம்... நீங்கள் கிளம்பலாம்.

பாரதி:
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
      நன்மை வந்தெய்துக, தீதெல்லாம் நலிக
வந்தே மாதரம்... வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்போம்..  ... ...
எங்கள் மாநிலத்தாயைவணங்குது மென்போம்
வந்தே மாதரம்... வந்தே மாதரம்
(நன்மையே வருக...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...