பெண்மை
விடிய, விடிய மேட்ச் பார்த்துவிட்டு
தூங்குபவனை எழுப்பினால்,
கையிலிருக்கிறது ‘கேஷுவல் லீவ்'
என்றபடி புரள்கிறான்...
‘தலைவலிக்கிற மாதிரி இருக்கு.......'
துணை செய்கிறது மெடிக்கல் லீவு...
‘ஏர்ன் லீவ்' மிச்சமிருக்கு என்றபடி
கூட்டாளிகளோடு ‘டூர்' போகிறவனை
கையசைத்து அனுப்பிவிட்டு
விடுப்பில்லா அடுப்படியில்
புகைகிறது பெண்மை.
33
ஒன்றுமேயில்லாத கருவாயிருந்த
உங்கள் இருப்பை
நிலைநிறுத்தத் தந்தோம்
கருப்பையில் நூறு சதம்
இப்பொழுது உங்களிடமே
கையேந்தி நிற்கிறோம்
இருக்கையில் முப்பத்திமூன்று சதத்துக்கு.
தேர்ச்சி
கணிதத்தோடு போராடுகையில்
வருகிறதொரு குரல்...
‘ஒரு குடம் தண்ணி பிடிச்சு
உள்ளே வையேன்'
அறிவியலோடு உரையாடுகையில்
‘அடுப்படியில் கூட நிக்காம
எப்படி நீ குப்பை கொட்டப் போறே?'
வரலாற்றைப் புரட்டும்போது
புரட்டியெடுக்கிறது
மாதாந்திர வலி...
இருப்பினும் ஒவ்வொரு வருடமும்
தலைப்புச் செய்திகளில் தவறாமல்
‘இந்த வருடமும் மாணவிகளின் தேர்ச்சி சதம் அதிகம்'!
பெண்மை 33 % தேர்ச்சிப் பெற யாசிக்க வேண்டியதில்லை . யோசிக்க வேண்டும். விடுவதில்லையே இந்த சமுகம் சாமான்யமாக.
பதிலளிநீக்கு//ஒன்றுமேயில்லாத கருவாயிருந்த
பதிலளிநீக்குஉங்கள் இருப்பை
நிலைநிறுத்தத் தந்தோம்
கருப்பையில் நூறு சதம்
இப்பொழுது உங்களிடமே
கையேந்தி நிற்கிறோம்
இருக்கையில் முப்பத்திமூன்று சதத்துக்கு./
உண்மையான கருத்து..
மிக்க நன்றி மணிச்சுடர் ... படைப்பாளிகளாகிய நாம் யோசிப்போம் .. உலகின் அனைத்து மாற்றங்களுக்கும் பின் ஏதேனும் ஒரு எழுத்து இருக்கிறது..ஏதேனும் ஒரு படைப்பாளி இருக்கிறான்
பதிலளிநீக்குமிக்க நன்றி மலிக்கா.. உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
பதிலளிநீக்குதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html
arumai
பதிலளிநீக்கு