தனது எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியின்றி வாழ்ந்திருந்த கடலூர் கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி அவர்கள் நேற்று(05.03.2013) பகல் 11.30 மணியளவில் தன்னுயிரை தமிழோடு இணைத்து உடல் கிடத்தினார் எனும் செய்தி தமிழ் கூறும் நல்லுலகை வேதனையில் ஆழ்த்துகிறது.
அவரது மகன்கள் திரு.இளந்திரையன் , திரு. இளம்பரிதி ஆகியோர் எனது உற்ற தோழர்கள் ... கல்விக் காலத்திலிருந்து .
கடந்த மாதம் தனது தந்தையின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் பரிதி. புதுச்சேரி சென்று மருத்துவ மனையில் கண்டு வந்தேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதுபவரும், தனது 25-வது நூலை (மரபும் திரிபும்) நலக்கேடான உடலின் உபாதைகளையும் மீறி மாறா தமிழ்க்காதலில் எழுதி, மின் வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை மூலம் அச்சேற்றி நூலாக்கியவருமான அவரிடம் நான் எழுதிய நூல்களில் சிலவற்றை கையளித்தேன் பழங்களுடன். ஆர்வம் மிக அந்நூல்களைப் பார்வையிட்டார் அந்நிலையிலும்.(சைகையிலும் குறைந்த வார்த்தைகளிலும் இருந்தது அவரது உரையாடல்)
நேற்று இழப்பின் செய்தியறிந்து சென்ற என்னை துக்கம் மிகுத்தது, படுத்த படுக்கையிலும் நான் தந்த நூல்களை அவர் வாசித்தார் என்பதும் தன இருபத்தைந்தாம் நூலை மறக்காமல் எனக்குத் தரும்படியும் சொன்னார் என நண்பர் வாயிலாக அறிந்தபோது என்னுணர்வை கண்ணீராகத் தான் உகுக்க முடிந்தது.
சராசரித் தராசுகளால் நிறுத்துப் பார்க்க முடியாதவர் கவிச்சித்தர் என புலவர் மு. அழகப்பன் சொன்னது போல் அவரது நூலும் என் கைகளில் கனத்தது.
தனது எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியின்றி வாழ்ந்தவர்; குறையாத தமிழ்ப் பற்று; எண்ணங்களை வெளிப்படுத்துவதில் துணிவு; மாற்றுக் கருத்துக்களை வரவேற்கும் நற் பண்பு; வளர்கின்ற திறனாளிகளைக் கண்டுபிடித்துப் பாராட்டும் பெருங்குணம்; தனது படைப்புகளின் வீச்செல்லை, விளைவுகள் குறித்துக் கற்பனை கலவாத தெளிவு, எளிமை... என விரித்துச் சொல்லத் தக்க தகைமையாளர் எனும் ப.மணவாளனின் கூற்று அத்தனையும் சத்தியம்.
இன்று பகல் (06.03.2013) 11. 30 மணியளவில் கடலூரில் தன் இல்லத்தில் இப்போதைக்கு இருக்கும் அன்னாரின் பொன்னுடல் புதைபடப் போகிறது தமிழ் மண்ணில்...
இருக்கும் நாமெல்லாம் இறைஞ்சுவோம் அவரின் ஆன்ம சாந்திக்காக.....
('''க. பொ. இளம்வழுதி''' (பிறப்பு: [[ஜனவரி 6]], [[1936] இறப்பு: மார்ச் 5, 2013]) என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். [[புதுச்சேரி]]யிலுள்ள கலிதீர்த்தாள் குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். தந்தை வெ. பொன்னுச்சாமி, தாய் தனபாக்கியம். வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சிவப்பு நிலா, குறுநூறு, சிவப்புச் சிந்தனைகள் உள்ளிட்ட 11 கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் வெளியிட்டவர். இவர் எழுதிய ''"விளையாட்டுகள் அன்றும் இன்றும்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004|2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.- நன்றி: http://ta.wikipedia.org )
கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதியின் இலக்கியப் படைப்புக்கள்:
Title | Category | Download |
சிவப்பு நிலா (தமிழக அரசின் பரிசு பெற்றது) | காவியம் | |
நந்திவர்மன் காதலி | " | |
வேர்கள் (புதுவை அரசின் பரிசு பெற்றது) | கவிதை-நிகழ்வுகள் | |
ஆண்டவன் அறுபது | " | |
நிறங்கள் | " | |
குறுநூறு | கவிதைத் தொகுப்பு | |
சிவப்புச் சிந்தனைகள் (தமிழக அரசின் பரிசு) | " | |
வண்ணத்தமிழ் | " | |
சில்லுகள் | " | |
வாக்கு மூலம் | " | |
வெடித்து முளைத்த விதைகள் | " | |
தளிர் | " | |
வெண்பூக்கள் (திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு) | " | |
நாளங்கள் (கரூர் இலக்கிய அறக்கட்டளைப் பரிசு) | " | |
வெற்றியின் அறிமுகம் (நேரு) | உரைநடை-வரலாறு | |
இலக்கை நோக்கி (மண்டேலா) | " | |
வைகரைப் புள் (கவிஞர் வாணிதாசன்) | " | |
கார்ககில் கதை (கார்க்கில் போர்) | " | |
போராட்டப் பூமி (வியட்நாம்-ஹோசிமின்) | " | |
நம்முடன் நல்லவர் (நல்லகண்ணு) | " | |
ஆரங்கள் (உடல் நலன்) | உரைநடை | |
இலக்கிய அறிமுகம் (இலக்கியம்) | " | |
தமிழைத்தேடி (மொ.ழி) | " | |
விளையாட்டுக்கள்-அன்றும் இன்றும் (தமிழக அரசின் பரிசு பெற்றது) | " | |
மரபும் திரிபும் (இலக்கிய ஆய்வு) | " |
நன்றி: http://www.senthamizh.com
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குஅன்னாரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.....
பதிலளிநீக்கு