பசு, எலி, பூனை, காளை நான்கும் ஓரிடத்தில் நின்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தன.
“மனிதர்களுக்கு நான் தான் பால் தருகிறேன். எனவே நான் தான் இங்கு மிக முக்கியமானவன். நான் இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும்” என்றது பசு.
“நான் இல்லையென்றால் பசு தாய்மை அடையாது... மனிதர்களுக்கு பாலும் கிடைக்காது.. என்னை விட முக்கியமானவர் யார்?. ” என்றது காளை
“நான் இல்லாவிட்டால் பூனைகள் என்ன சாப்பிடும்? மனிதர்கள் உணவைத் தானே திருடி சாப்பிடும்? எனவே நான் தான் இங்கு மிக முக்கியம். நான் மரணமுற்றால் இந்த உலகமும் மரணம்” என்றது எலி.
“நான் மட்டும் இல்லையென்றால் மனிதர்களின் பசியாற்றும் பயிர்களை எலிகள் தின்று அழித்துவிடும் எனவே நான்தான் மிக மிக முக்கியம். நான் இல்லையெனில் சர்வமும் இல்லை” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டது பூனை.
குறுக்கே நடந்து சென்ற மனிதன் “ ஆக என்னைச் சுற்றிதான் உங்கள் வாழ்வும், இயக்கமும்.. நான் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் தேவையே இல்லை. நான்தான் இந்த உலகமே” என்றான் கர்வத்துடன்..
பல்லாயிரம் ஆண்டுகளாய் இவர்கள் யாரும் இல்லாமலேயே பூவுலகில் இயங்கிப் பழகிய சூரியனும், நிலாவும் எப்பொழுதும் போல ஒளியை வீசியபடி எதுவும் பேசாமல் கடந்தன இவர்களை..!
தங்களது பின்னூட்டத்தை படித்தப்பிறகுதான் இங்கு வருகிறேன் ஐயா..பல நாட்களாக உங்கள் எழுத்து படிக்காமல் இருந்ததில் வருத்தம்.அருமையான கதை..நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி குமரன் .. உங்கள் இரானிய பட விமர்சனங்களை மிகவும் எதிர்பார்க்கிறேன் ..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகுறைகுடம் கூத்தாடும் நிறைகுடம் தழும்பாது என்கிற பழமொழியை உணர்த்திச் செல்கிறது இந்த கதை. சிறப்பு சார்..
பதிலளிநீக்கு