பனிரெண்டு மின்னல்கள்
கி. பி. 2139, ஏப்ரல்-5
விண்வெளிப் பயண அனுமதிக்கூடம் எந்த பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. நேரம் 11-03. செக்-இன் பகுதியில் M 192030 தன் அடையாள அட்டையை செலுத்தி நுழைவு அனுமதிச் சீட்டுக்காக காத்திருந்தான். சில நொடிகள் கழிந்து 11-08க்கு உள்செல்ல அனுமதி கிடைத்தது. பின் W 649122 தன் கார்டை செலுத்தினாள். 11-10க்கு நுழையலாம் என பதில் வந்தது. இருவரும் தங்கள் ஆவணங்களை சரிபார்த்தனர். CC கேமரா இருவரையும் zoom செய்து அறைகளின் ப்ளாஸ்மா டி.வி.க்களில் காட்சிப்படுத்தியது. அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது.
“ இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு” என்றான்
“ ஆச்சர்யமா இருக்கு... நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள்? தேனிலவு என்று பெயரிட்டிருக்கிறர்கள். இப்ப நம்ம தேனிலவுக்கு நிஜமான நிலவுக்குப் போறோம்”
“நமக்கு தரப்பட்ட 15 நாட்களை நீட்டிக்க முடியாதா?”
“ ரெண்டாவது முறையா அப்ளை பண்ணியும் அனுமதி கெடைக்கலை. நமக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆனப்புறம் இப்பத்தான் முதலிரவுக்கு அனுமதி கெடைச்சிருக்கு. ஒரு காலத்துல கர்ப்பமான அப்புறம் ஸ்கேன் பண்ணி ஆணா பெண்ணான்னு பார்ப்பாங்க. இப்பல்லாம் இன்னின்னாருக்கு இன்ன குழந்தைதான்னு அரசுதானே முடிவு பண்ணுது. நமக்கு பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு எண் கூட ஒதுக்கிட்டாங்களாம். அதற்கு இடது கன்னத்தில் குழி விழுமாம் . உதட்டோரத்தில் ஒரு மச்சம் இருந்தால் நல்லதுங்கற உன்னோட ஆசையைக்கூட அரசு ஏத்துகிச்சு.”
“ சந்திரனில் ஹனிமூன் கொண்டாடுவோர் பட்டியலில் நாம் எத்தனையாவது பேர்?”
“ஹும்.. பெயர்களின் காலமெல்லாம்தான் முடிஞ்சுபோச்சே. சாதனை பட்டியல்ல பெயர் என்கிற தாகம் தனிமனிதனை விட்டுச்சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. எத்தனையாவது பேர்னு தெரிஞ்சு என்ன ஆகப்போவுது? இனிம சரித்திரத்தில் பெயர்களுக்கு சாத்தியமில்லை. எண்கள் வந்தபிறகு என்னை மறந்தேன் அப்படின்னு தமிழில் ஒரு வரி கவிதை உண்டு. உன்னோட குஜராத்தி மொழியில இந்த வரி மொழி பெயர்த்து வரும்போது இதன் கவித்துவம் புரியாது.”
வாய்ஸ் சிந்தஸைசரில் எந்த மொழியில் பேசப்படும் வார்த்தைகளையும் கேட்பவர் மொழிக்கு மாற்றி குரல் வரும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டுகிறான் என்று புரிந்தது.
“குஜராத்தில் பிறந்த என்னையும், தமிழ்நாட்டில் பிறந்த உங்களையும் எந்த அடிப்படையில் ப்ரைம் பவர் தலைமையகம் இணைத்தது என்று புரியவில்லை”
“ கேட்டால் கெமிஸ்ட்ரி என்பார்கள். டி.வி. சானல்களோட பாதிப்பு எந்த யுகத்துல ஒழியும்னு தெரியல. எனி ஹவ் ஐ லவ் யூ ஹனி..”
“ ஐ டூ..”
11-08 ஆனதை டிஜிட்டல் எண்கள் காட்ட ஆட்டோமேடிக் கதவுதிறந்தது. அவன் உள்ளே சென்றான்.
அவனது ஆவணங்கள் அடங்கிய சிப்-ஐ ஸ்கேனரில் நுழைத்தான். சில நிமிடங்களில் ‘வெயிட் ஃபார் என்கொயரி' என்று திரையில் மின்னியது.
என்கொயரி அறைக்குள் நுழைந்தான். சுடச் சுட காஃபி அவன் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. “ காலங்கள் மாறினாலும் காஃபியின் அடிமைகள் மாறுவதில்லை” அங்கிருந்த உயர் அதிகாரி புன்னகையுடன் கேட்டார்.
“ யெஸ் சார்” காஃபியை அருந்தியபடி பதிலளித்தான்.
“ உங்கள் பெர்மிட் கார்ட் செக் - இன் கம்ப்யூட்டரில் அனுப்பியிருக்கிறோம்.
சில நொடிகளில் declined என்று சிவப்பு எழுத்துக்கள் தோன்றின.
“ வாட் ஹேப்பன்ட் டூ மிஷின் சார்”
“ இட் இஸ் பெர்ஃபெக்ட் மை பாய். ப்ளீஸ் ஸிட்டவுன். மன்னிக்கவும். உங்கள் சந்திர மண்டல பிரயாணம் சில காரணங்களால் மறுக்கப்படுகிறது”
“ மே ஐ நோ த ரீஸன் சார்?”
“ நீங்கள் சீஃப் -ஐ பார்க்கும்போது அதன் விபரங்கள் உங்களுக்குப்புரியும். உங்களுக்கு இஸ்ரோவில்தானே பணி”
“ ஆவணங்களை பார்த்திருப்பீர்களே”
“ அஃப்கோர்ஸ். நீங்கள் சீஃப்- ஐ 11-13 க்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அது வரை நாம் கேஷூவலா பேசிட்டிருக்கலாம்”
“ இரண்டு வருடங்களுக்கு முன்பே அப்ளை செய்து, சென்ற மாதம் ஃபைனல் அப்ரூவலும் மெயில் பாக்ஸ்சில் கிடைத்தது. இப்பொழுது திடீர்னு...”
“ காஃபி அஸ்ஸாம் -ன் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்ட உயர்ந்த தரமான காஃபிச்செடிகளில் இருந்து தருவிக்கப்பட்ட காஃபிக் கொட்டைகளில் தயாரிக்கப்பட்டது. சுவையாக இருந்ததா?”
இனி இவரிடத்தில் எந்த உருப்படியான பதிலும் கிடைக்காது என்று புரிந்தபோது ஆயாசமாக இருந்தது.
11-13-க்கு சீஃப் -ன் அறை கதவு திறந்தது. உள்ளே நுழைந்தான்.
“ வெல்கம் மை பாய் ஹௌ ஆர் யூ?”
“ நீங்கள் தமிழர்தானே'
“ ஷ்யூர்”
“ நெனச்சேன். எனக்கும் சமயத்துல இப்படித்தான் டக்குன்னு இங்க்லீஷ்தான் வரும்”. ஆங்கிலம் என்கிற பொது மொழி அப்படியே சிந்தஸைசரில் கிடைத்தது.
“ காஃபி எப்படி இருந்தது?”
உன் காஃபியைத் தூக்கி உடைப்பில் போடு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். நல்லவேளை மனதில் நினைப்பதை சென்ஸ் செய்யும் தொழில்நுட்பத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.
“ சந்திர மண்டலத்தில் பறக்கும் காஃபி அருந்தலாம் என்று நினைத்தோம்.”
“அதற்கென்ன அடுத்த வாரம் ஸ்பேஸ் எக்ஸிபிஷன் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வான மண்டலத்தில் எந்த கிரகம் எப்படி இருக்குமோ அதைப்போல் செயற்கையாக வடிவமைக்க இருக்கிறார்கள். உன் ஆசை விரைவில் நிறைவேற வாய்ப்பிருக்கிறது.”
“ அனுமதி மறுப்பிற்கான காரணத்தை சட்டப்படி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது”
“ அஃப்கோர்ஸ். அதற்கு பதிலளிக்கும் கடமையும் எனக்கு இருக்கிறது. நீ இஸ்ரோவில் இருப்பதால் என் வேலை சுலபமாக இருக்கும் என நம்புகிறேன் டெலிமஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
“ தெரியும் செவ்வாய் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு அஸ்ட்ராயிடுகளில் ஒன்று”
“ அஸ்ட்ராயிடுகள் பற்றி உனக்கு எந்த அளவுத் தெரியும்?”
“ இது இண்டர்வ்யூ இல்லை சீஃப்”
“ தெரியும் ஆனால் விசாரணை என்று வந்தால் எல்லாவற்றையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லுங்கள்”
“ நம் சூரிய குடும்பத்தில் பூமி உட்பட எட்டு கிரகங்கள். சந்திரன் உட்பட 31 உப கிரஹங்கள். பல லட்சம் அஸ்ட்ராயிடுகள், நட்சத்திரங்கள். மிகச்சிறிய அளவுள்ள அஸ்ட்ராயிடுகளில் கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. பூமியில் மிகத்தட்டுப்பாடான நிக்கல், சிலிகன், நைட்ரேட், அமோனியா, எண்ணற்ற ஆக்ஸைடுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாடும் இந்த அஸ்ட்ராயிடுகளை தன் வசப்படுத்த முயற்சிக்கின்றன.”
“ இந்த அஸ்ட்ராயிடுகள் சுற்றுப்பாதையை விட்டு கொஞ்சம் விலகி பூமியை நோக்கி நகர்ந்தால் என்ன நடக்கும்?”
“ அதி பயங்கரமான பூகம்பங்கள் தோன்றும். புழுதி நிறைந்த வாயுமண்டலம் ஆக்ரமித்து சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுத்து பூமியில் குளிர் மிகுந்து பனிசகாப்தம் உருவாகி மொத்த உயிரினங்களும் விறைத்து செத்துப்போகும். ஒரு காலத்தில் டினோஸர்கள் மட்டுமே இருந்து பின் அழிந்து போனதற்கு அஸ்ட்ராயிடுகள் தாக்குதல்தான் காரணமாக இருக்கலாம். 19-ம் நூற்றாண்டில் இரண்டு முறை பூமிக்கு அருகில் வந்து பின் நகர்ந்துவிட்டது அதிர்ஷ்ட வசமாக தப்பியிருக்கிறோம்”
“டெலிமஸ் அஸ்ட்ராயிடு தன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வருவதும் உனக்குத்தெரியும் என்று நினைக்கிறேன்”
சற்றுத் தயங்கி “ தெரியும் “
“ யு. எஸ்சில் உள்ள நாசா அதனைத் தடுப்பதற்கு ராக்கெட்டுகளில் ஹைட்ரஜன் குண்டுகளை நிரப்பி அதைத்தாக்கி திசைத்திருப்பத் திட்டமிட்டுள்ளது என்பது தெரியுமா?”
“ மன்னிக்க வேண்டும் சீஃப் இது வரை நான் சொன்னவை தகவல்கள். இப்பொழுது நீங்கள் கேட்பது அரசுத் துறை சம்பந்தப்பட்டவை. அது பற்றி உங்களிடம் பேச எனக்கு அனுமதி இல்லை”
உள்ளங்கையைப் பிரித்து அதிலுள்ள ஃபிங்க்டிப் கம்ப்யூட்டரை திறந்து சிகப்பு பக்கங்களை பாஸ் வேர்ட் கடந்து ஓபன் செய்கிறார். அதன் வழியே தன் ஆணையை அனுப்புகிறார்.
ஒரு சில நொடிகளில் ‘நோ அப்ஜெக்ஷன்' கிடைத்துவிடுகிறது.
“ ஓ.கே, சில விஷயங்களில் வெளிப்படையான விவாதம் பொது மக்களுக்குள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் நீங்கள் பேச யோசித்தீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது தொடரலாமா?”
“ யு.எஸ். இதன் முழு பொருளாதார பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது. சில தொழில்நுட்ப உதவிகளுக்காக நம்மைப்போன்ற சில நாடுகளை அணுகியிருக்கிறது.”
“ அந்த ஆபரேஷனுக்கு டிசம்பர் 21 நாள் குறிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?”
“ அன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பது கூட முழுவதுமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. சரியாக 2 மி.மீ மழை பெய்யும், பனிரெண்டு மின்னல்கள் வெட்டும் என்பது வரை கண்டறியப்பட்டுள்ளது. அறிவியலில் நம் வளர்ச்சி பற்றி உங்களுக்கு அடிப்படையில் சந்தேகம் இருக்கிறது போலிருக்கிறது”
“ சந்தேகம் அதிலில்லை ஜெண்டில்மேன். இந்த ஆபரேஷனை செய்யப்போகும் யு.எஸ். மீதுதான்.”
“ புரியலையே”
“ அமெரிக்கா ஆதாயம் இல்லாமல் ஆற்றிலும் இறங்காது, ஆகாயத்திலும் ஏறாது. உலகத்துக்கு வரும் இந்த ஆபத்தை ஒண்டியாய் தன் தலையில் ஏன் தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தீர்களா?”
“ தன் அறிவியல் பராக்கிரமத்தை காட்டத்தான்”
“ உங்களுக்கு அறிவியல் மட்டும்தான் தெரியும். எங்களுக்கு அரசியலும் தெரியும்.”
“ இந்தியா முழுக்க பாலிட்டிஷீயன்களை ஒழித்தாகிவிட்டது. இன்னும் பாலிடிக்ஸ்-ஐ ஒழிக்கவில்லை என்பது உண்மைதான் போலிருக்கிறது.”
“ நோ ஜோக்ஸ் ப்ளீஸ்... பணத்தைக் கேட்டால் எந்த நாடும் ஜகா வாங்கும்.. தொழில்நுட்ப உதவி என்றால், அதற்கென்ன தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று தாரை வார்த்துவிடுவார்கள்.. அவர்களின் சூட்சுமம் அங்குதானிருக்கிறது.”
“ புரியலையே”
“ இப்பொழுது அவர்களுக்கு இருக்கும் அறிவியல் திறத்தில் அஸ்ட்ராயிடுகளை திசைத் திருப்பி சிறு தவறு நிகழச்செய்தால் போதும், பூமியின் ஒரு பகுதி மட்டும் சேதாரமாகிவிடும்”
“ அப்படிச் செய்தால்..?”
“ உலக வரைபடத்தில் ஆசியப் பகுதியை மட்டும் சிரைத்துவிடுவார்கள்.”
“ அட கடவுளே, அவர்களுக்கு சவாலாயிருக்கிற இந்தியா, சீனா, ஜப்பான் மொத்தமும் காலி”
“ எல்லாம் முடிஞ்சபிறகு மொத்த உலகத்தை காப்பாத்த நடந்த முயற்சியில தெரியாம நடந்து போச்சுன்னு கண்ணீர் வடித்து, தப்பி பிழைத்த நாடுகளுக்கு நிவாரணம் தரலாம்கறதுதான் அவங்க திட்டம்”
“ நம் இந்திய விண்வெளிஆய்வுக்கூடங்களில் மிக எளிதாக இந்த தவறு முன்கூட்டியே கண்டுபிடித்துவிடக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறதே. இந்த சின்ன விஷயம் கூட அவர்களுக்குத் தெரியாதா?”
“ அப்படியான ஆற்றல் பெற்ற ஒரு சிலரை ஒரு நல்ல விலைக்கு வாங்கிவிட்டால்...”
“ என்னது..”
“ விண்வெளியில் ஆய்வுக்கூடங்கள் வைத்திருக்கும் நம்மைப்போன்ற ஒரு சில நாடுகளிடம் மட்டும் அமெரிக்கா தொழில்நுட்ப உதவியை கேட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நம் விண்வெளி ஆய்வுகூடத்தை அந்த சமயத்தில் பயன்படுத்திகொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள். சர்வதேச ஒப்பந்தபடி நம் இந்திய நிபுணர்கள்தான் அதில் பணியாற்ற முடியும். ஆசியாவின் மீது டெலிமஸ் அஸ்ட்ராயிடு தாக்கும்போது அவர்கள் பாதுகாப்பாக செவ்வாயில் இருப்பார்கள்.”
“ நம்மாட்கள்தானே..”
“ முழு ஆபரேஷனையும் யு.எஸ்.தான் ஏற்றிருக்கிறது. எனவே நாசாவில் அவர்களது விஞ்ஞானிகளோடு இணையாக பணியாற்ற வேண்டியிருப்பதால், செவ்வாய் கிரகத்தில் இருக்கப்போகிற நம் இந்திய நிபுணர்களை யு.எஸ்.தான் தேர்வு செய்கிறது”
“ என்ன சார் இது இந்த துரோகத்தை யார் செய்யப்போகிறார்கள். அதுவும் ப்ரைம் பவரின் க்ளோஸ்டு சர்க்யூட் நெட்வொர்க்கில் எல்லாமும் கண்காணிக்கப்படுகிறது எப்படி இது சாத்தியம்?”
“ துரோகிகளுக்கு எல்லாம் துச்சம். சில சாஃப்ட்வேர் க்ராக் ப்ரோக்ராம்கள் உதவியோடு இந்த பேரத்தில் இறங்கியிருக்கிறார்கள்”
“ இன்னும் ஏன் இந்த தேசம் அவர்களை விட்டுவைத்திருக்கிறது?”
“ இது ஒரு யுத்த தந்திரம்தான். அவர்களை அப்படியே அனுமதிப்பது. அவர்களின் அந்த திட்டத்தை அவர்கள் வழியிலேயே முறியடிப்பது. இதுதான் இப்பொழுது நம் யுக்தி”
“ சரி, நான் இதில் எங்கு வருகிறேன்?”
“ சந்தேக வளையத்தில் நீங்களும் இருந்தீர்கள்”
“ சார்...” திடுக்கிட்டு எழுந்தான்
“ கூல் டவுன் அண்ட் சிட்டவுன். சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து போயின. நீங்கள் க்ளீன் சிலேட் என்று கண்டறியப்பட்டுள்ளது.”
“ அப்ப எங்களை சந்திரனுக்குப் போகவிடுங்க. ரெண்டு வருஷமா கட்டி வச்சிருக்கிற கனவுக்கோட்டை. கொஞ்ச நேரத்துல ஆட்டம் கண்டுடுச்சு”
“இன்னும் இருக்குது மை பாய். நீங்கள் சந்திரனுக்கு போகப்போவதில்லை”
“ அப்ப எங்க ஹனிமூன் கேன்சலா?”
“ ஹனி உண்டு.... மூன்தான் இல்லை”
“ நீங்கள் புதிர்களின் சீஃபா”
மெல்ல சிரித்து, “ நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு போகப்போகிறீர்கள்”
“ என்ன செவ்வாய்க்கா....?” மறுபடி எழுந்தான்.
“இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது. நின்றுகொண்டே பேசமுடியாது.. உட்காருங்கள். செவ்வாய் கிரகத்தில் முதலிரவு கொண்டாடப்போகும் முதல் இந்தியத் தம்பதி நீங்கள்தான்”
“ இதுவரைக்கும் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கமட்டும்தான் தெரியும்னு நெனச்சேன். இன்ப அதிர்ச்சியும் கொடுப்பீர்கள் போலிருக்கிறது”
“ போன வாரம் நம்ம ப்ரைம் பவர் ஒரு ஃபங்ஷன்ல செவ்வாயில் ஒரு ஸ்பேஸ் ரிஸார்ட் அமைச்சிருக்கோம்னு சொன்னாரில்லையா. அது செவ்வாயில் உள்ள நம் விண்வெளி ஆய்வுகூடத்துக்கு இணையா அமைச்சிருக்காங்க அப்படிங்கறது உங்களுக்கேத் தெரியும். அதில் இன்னொரு ஆய்வுகூடத்தை எதுக்கும் இருக்கட்டும்னு அமைச்சிருக்கோம்கறதும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாத இன்னொரு விஷயமும் அதில் உண்டு. மெயின் ஆய்வுக்கூடம் இயங்கமுடியாத பட்சத்தில் இதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆய்வைத் தொடரலாம். அதற்கான சகல தொழில்நுட்பமும் அதில் இருக்கு. அங்க தங்கறதுக்கு ஆறு ஜோடிகளை தேர்வு செய்திருக்கிறோம். அதில் ஒரு ஜோடி நீங்கள்.”
“ தொன்னை கிடைக்கும்னு வந்தோம். வெண்ணையே கிடைக்குது. ஆனா எங்க சீனியாரிட்டி ரொம்ப பின்னாடி ததிங்கனத்தோம் போடுதே”
“ அதெல்லாம் ப்ரைம் பவரின் சிறப்பு அனுமதியின் பேரில் ஓவர்லூப் செய்யப்படும்”
“ எப்படி இந்த லக்கி ப்ரைஸ் எங்களுக்கு?”
“ சந்திரனுக்கு செல்வதற்கு அனுமதி பெற்றவர்களில் ஒரு சிலர் தேதி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிலர் டிசம்பர் 20-ந் தேதி கேட்டிருந்தார்கள். அதாவது இந்த ஆபரேஷனுக்கு முதல் நாள் இங்கிருந்து தப்பிக்க ஏதுவாக... அவர்களில் பெரும்பான்மை பார்த்தால் விண்வெளி ஆய்வுத்துறை நிபுணர்களின் உறவினர்கள். திட்டப்படி செவ்வாய் கிரஹத்தில் ஆபரேஷன் முடிந்ததும் அப்படியே சந்திரனுக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு அவர்களுக்காக அவர்களது உறவினர்கள் காத்திருப்பார்கள்”
“ அடப்பாவிகளா?”
“நீங்கள் தேதி நீட்டிப்பு பெற்றாலும், டிசம்பர் 10- ந்தேதியே திரும்புவதாக உங்கள் ப்ரோக்ராம் உள்ளது. ஆக டெலிமஸ் அஸ்ட்ராயிடு தாக்குதல் நிகழ்ந்தால் அதில் நீங்களும் பலியாகக்கூடும். எனவே இந்த சதியில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்று புரிந்தது. என்றாலும் பல கட்டங்களாக கண்காணித்தாகிவிட்டது.”
“ அற்புதம். இப்பொழுது எங்கள் பணி என்ன?”
“ உங்கள் விண்ணப்பங்கள் திருத்தப்பட்டு செவ்வாய் இணை ஆய்வுகூடத்தில் இறக்கப்படுவீர்கள். நீங்கள் உங்கள் டெஸ்ட்டுகளை முடித்தபிறகு ரெடி என்று சிக்னல் கிடைத்தவுடன் இங்கிருந்து உங்களுக்கு கட்டளைகள் வரும். மெயின் ஆய்வுகூடத்தை சகல இணைப்புகளிலிருந்து துண்டிக்கவேண்டும். இது எதிர்பாராமல் நடந்தது போல் இருக்கவேண்டும். அமெரிக்க ஆய்வுக்குழுவினருடன் நீங்கள் இணைந்து டெலிமஸ் அஸ்ட்ராயிடினை வேறு பாதைக்கு திருப்ப வேண்டும். உங்கள் பணி முடிந்ததும் உங்கள் முதலிரவுக்காக கூடுதலாக சில நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவீர்கள்”
“ பேசாமல் அந்த அஸ்ட்ராயிடை அமெரிக்க கண்டத்தின் பக்கம் திருப்பிவிட்டால் என்ன?”
அவனது தோளைத் தட்டி, “ வீ ஆர் இண்டியன்ஸ். நாமெல்லாம் இந்தியர்கள். எத்தனை மிஷின்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், மனதால் ஈரமிக்க இந்தியர்கள்.”
“யெஸ் சார்” செல்லமாக ஒரு ராணுவ சல்யூட் அடித்தான். “ இது பற்றி என் மனைவியிடம்....”
“ இந்நேரம் விளக்கியிருப்பார்கள் இன்னொரு அறையில்”
“ எங்களோடு வரப்போகிறவர்கள்...”
“ பொறுத்திருங்கள். இன்னும் நாலு ஜோடிகள். அதாவது நீங்கள் மொத்தம் பனிரெண்டு பேரும் சந்திக்கின்ற நேரம் வரும். இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் இங்கேயே பயிற்சி பெறப்போகிறிர்கள். பயணம் புறப்படும் வரை வெளி செல்ல அனுமதி இல்லை.இந்த ஆபரேஷனுக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் பனிரெண்டு மின்னல்கள். அமெரிக்க விண்வெளி தந்திரத்தை தகர்க்கப்போகும் மின்னல்கள் நீங்கள்தான்”
“ தேங்க் யூ சார், திடீர்னு உடம்பெல்லாம் பாரமா ஆயிட்ட மாதிரி இருக்கு.. எவ்வளவு பெரிய பொறுப்பு. நம்மால முடியுமான்னு பயமா இருக்கு”
“ டோண்ட் வொர்ரி மை பாய்..நம்மால சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பமுடியுமான்னு சந்தேகப்பட்ட காலம் ஒண்ணு இருந்துச்சு. சந்திராயனை அனுப்பலையா? இப்படி பயந்திருந்தா அன்னைக்கு நடந்திருக்குமா? நிச்சயம் நம்மால முடியும் யெஸ் வீ கேன்... ஆல் த பெஸ்ட்”
மீண்டும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு உற்சாகமாக பயிற்சிக்களத்துக்கு நடந்தான்

Hai After a long time, a good science fiction I like it very much.
பதிலளிநீக்குஅது எப்படி பாரதி உங்களால் எல்லா உலகத்துக்குள்ளும் இத்தனை சுலபமாகப் போய் வர முடிகிறது...? ஆச்சரியமான அதிசயமாக இருக்கிறீர்கள்.... என் விஷ்ணுவுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும் இந்த கதையை....
பதிலளிநீக்குமிக்க நன்றி தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் . வெ வ் வேறு பணிகள் காரணமாக இணையத்தில் நுழையாமல் இருந்தேன் .. மன்னிக்க
பதிலளிநீக்குவணக்கம் ஜோதி வணக்கம் ப்ரியா நலம்தானே ... உங்கள் கருத்துரைகளுக்கு நெகிழ்வான நன்றி தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
பதிலளிநீக்கு